Sunday, 26 January 2014

யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை

யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை

Source: Tamil CNN
 fish
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சியிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரும் ஊர்காவற்துறை நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட 25 மீனவர்களது 06 படகுகளும் அவர்களிடமே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த மீனவர்கள் கடந்த 21 ஆம் திகதி வடபகுதி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 40 பேர் நேற்றுமாலை விடுதலை செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது தமிழக மீனவர்கள் 40 பேரை விடுதலைசெய்து அவர்களின் 09 படகுகளையும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி குறிப்பிட்டார்.
நேற்று விடுதலை செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களுடன் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...