வர்ண ஜாலத்துடன் வெடித்து சிதறும் இராட்சத நட்சத்திரம்
விண்வெளியில் உள்ள பால் மண்டலத்தில் கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் ஆயுட் காலம் முடியும் வேளையில் அவை வெடித்து சிதறி வர்ண ஜாலங்களை ஏற்படுத்தும். அதை சூப்பர் நோவா என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
விண்ணில் நடக்கும் இந்த அதிசயத்தை பகல் நேரங்களில் வெறும் கண்ணால் கூட பார்க்க முடியும். அப்படிப்பட்ட ஒரு அதிசயம் சமீபத்தில் நடந்தது.
இதை லண்டன் வானிலை ஆய்வு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்கள் கண்டுபிடித்தனர். டெலஸ்கோப் குறித்த பாடத்தின் போது அவர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மிகப் பெரிய இராட்சத அளவிலான நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதறி வர்ண ஜாலங்களை வெளிப்படுத்தியது.
இப்புதிய சூப்பர் நோவா மெஸ்சியர் 82 விண்மீன் கூட்டத்தில் இருந்து 1 கோடியே 20 இலட்சம் ஒளி மைல் தூரத்தில் உள்ளது. ஆனால் இதை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது.
வெடித்து சிதறும் இந்த நட்சத்திரம் இன்னும் சில நாட்களில் பூமிக்கு அருகில் வரும் அப்போது பைனாகுலர் மூலம் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment