அமெரிக்காவில் நியூயார்க் நகர சுகாதாரத்துறை தலைவராக தமிழர் நியமனம்
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வருபவர் டாக்டர் ராமநாதன் ராஜூ. சென்னை தமிழர். சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். உயர் படிப்பை இங்கிலாந்து நாட்டில் படித்தார்.
அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற மருத்துவராக விளங்குகிறார்.
தற்போது சிகாகோ குக் கவுண்டி சுகாதாரத்துறை தலைமை செயல் நிர்வாகியாக உள்ளார். இவரை நியூயார்க் நகர சுகாதாரத்துறை தலைவராக மேயர் பில் டி பிளேசியோ நியமனம் செய்துள்ளார். 12 மருத்துவமனைகள், ஒரு சுகாதாரத்திட்டம் இவரது கட்டுப்பாட்டின் கீழ் வரும். தனது பணி நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள டாக்டர் ராமநாதன் ராஜூ, புருக்ளின் நகரில் உள்ள லுத்தரன் மருத்துவ மையத்தில் தனது மருத்துவ வாழ்வை தொடங்கியவர் ஆவார்.
நியூயார்க் நகரில் ராகுல் மெர்ச்சண்ட், மீனாட்சி சீனிவாசன் ஆகிய இரு இந்தியர்கள் முக்கிய பதவிகளில் ஏற்கனவே அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment