கலைஞனின் கைப்பட்டதும்...
கவனிப்பாரற்று
கிடந்த வயலின், கலைஞனின் கைப்பட்டதும், விலையேறப்பெற்ற இசைக் கருவியாக
மாறியது. கடவுளின் கைப்பட்டதும், சுருதி சேராத நம் வாழ்வும், விலைமதிப்பற்ற
இன்னிசையாக மாறும்.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
ஏலம் விடும் நிறுவனம் ஒன்றில், பழைய ‘வயலின்’ ஒன்று, ஏலத்திற்கு வந்தது. பார்க்கப் பரிதாபமாக இருந்த அந்த வயலினில், கம்பிகள் அனைத்தும் கழன்றிருந்தன. அந்த வயலினுக்கு ஆரம்ப விலை, 100 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது. யாரும் அதை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அப்போது, வயதான ஒருவர், ஏலம் விடும் மேடைக்கருகே சென்றார். அந்த வயலினை தன்னிடம் தரும்படி கேட்டார். அவர் அதை ஏலத்தில் வாங்கப்போகிறார் என்றெண்ணி, அதை, அவரிடம் கொடுத்தனர். அவர் அதை கையிலெடுத்து, தூசி துடைத்து, கம்பிகளை மீண்டும் முடுக்கி, அவ்வயலினைக் கொண்டு இசைக்கத் துவங்கினார். அரங்கத்தில் இருந்த அனைவருமே, அந்த இனிய இசையில் மெய்மறந்து அமர்ந்திருந்தனர். முதியவர், வயலினை மீண்டும் மேசையின் மீது வைத்துவிட்டு, வெளியேறினார். உடனே, சூழ இருந்தவர்கள், அந்த வயலினை, 10,000, 20,000 ரூபாய்க்கு போட்டி போட்டு வாங்க முன்வந்தனர்.
கவனிப்பாரற்று கிடந்த வயலின், கலைஞனின் கைப்பட்டதும், விலையேறப்பெற்ற இசைக் கருவியாக மாறியது. இதே புதுமை, நம் வாழ்விலும் நடக்கக்கூடும். கடவுளின் கைப்பட்டதும், சுருதி சேராத நம் வாழ்வும், விலைமதிப்பற்ற இன்னிசையாக மாறும்.

No comments:
Post a Comment