Tuesday, 26 May 2020

தாயின் மன்னிக்கும் மனம்

தாயின் மன்னிக்கும் மனம் புனித அன்னை தெரேசா

புனித அன்னை தெரேசா - அப்போது அந்த தாயின் முகத்தில் தோன்றிய புன்னகையே, உலகிலேயே மிகச் சிறந்த புன்னகை
மேரி தெரேசா: வத்திக்கான்
அந்த வயது முதிர்ந்த தாய்க்கு தொழுநோய். கை நிறைய ஊதியத்தோடு வளமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது அருமை மகன் அவரைத் தெருவில் வீசிவிட்டார். அந்த தாய், தெருவில், தொழுநோய் முற்றிப்போய், உடல் அழுகிய நிலையில், அன்னை தெரேசா அவர்களது பிறரன்பு இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டார். மற்ற நோயாளிகளுடன், அந்த தாய்க்குப் பணிவிடை செய்த புனித அன்னை தெரேசா அவர்கள், அவரிடம், உங்கள் மகனை மன்னிப்பது கடினம்தான், ஆனாலும் மகனை மன்னிக்க மாட்டீர்களா என்று அடிக்கடி கேட்டு வந்தார். அந்த தாய் தனது இறுதி மூச்சை விடுவதற்குமுன், தன் மகனை மனதார மன்னித்துவிட்டதாக ஒரு புன்னகையை உதிர்த்தார். அந்த நேரத்தை நினைவுகூர்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள், “அப்போது அந்த தாயின் முகத்தில் தோன்றிய புன்னகைதான், உலகிலேயே மிகச்சிறந்த புன்னகை” என்று சொன்னார்.
மன்னிப்பதே மனித மாண்பு. மன்னிப்பவர் மனிதர், மன்னிக்கத் தூண்டுபவர் மாமனிதர். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பவர் மனிதர். செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்பவர் மாமனிதர்.

No comments:

Post a Comment