Saturday 23 May 2020

பழக்கவழக்கங்களுக்கு நாம்தான் அடிமை

பழக்கவழக்கங்களுக்கு நாம்தான் அடிமை  இந்தியாவில் மது வாங்க காத்திருக்கும் கூட்டம்

மதுபோதைக்கு அடிமையானோர், போதைப் பழக்கத்தைக் கட்டிக்கொண்டு நிற்பதாலேயே, அது நம்மைக் கட்டி வைத்திருக்கிறது.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மதுபோதைக்கு அடிமையான ஒருவர் ஒருமுறை, ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்திற்கு வந்தார். "நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார், சொல்கிறேன்'' என்று அனுப்பி வைத்தார்.
மறுநாள் மாலை, அவர் ஞானியைத் தேடி வந்தபோது, ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நிற்பதைக் கண்டார். தூணைப் பார்த்து, "ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார் ஞானி.
மதுபோதைக்கு அடிமையான அந்த நபர் ஞானியை நோக்கி, "நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றார்.
உடனே ஞானி சிரித்துக்கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல, நீதான் குடிப்பழக்கத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறாய், அதனால் அப்பழக்கத்தை நீயே விட்டுவிடு'' என்று கூறினார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...