Thursday, 28 May 2020

பெத்லகேமில், கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா மீண்டும் திறக்கப்பட்டது

பெத்லகேமில், கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா மீண்டும் திறக்கப்பட்டது புனித பூமியின் பெத்லகேமில் உள்ள கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா

புனித பூமியின் பெத்லகேமில், கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா, மே 26, இச்செவ்வாய் முதல், மக்களின் வருகைக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
கோவிட் 19 தொற்றுக்கிருமி உருவாக்கிய நெருக்கடி நிலையால், புனித பூமியின் பெத்லகேமில், கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா, மே 26, இச்செவ்வாய் முதல், மக்களின் வருகைக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பசிலிக்காவில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், 50 பேருக்கு மேல் அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதையும், பசிலிக்காவில், நுழைவதற்குமுன் மக்களின் உடல் வெப்பநிலை அளக்கப்படும் என்றும் புனிதத் தலங்களின் காப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒருவருக்கொருவர் இடைவெளிகளைக் காப்பது, முகக்கவசமும், கையுறைகளும் அணிவது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதும், எக்காரணம் கொண்டும், புனிதப் பொருள்களைத் தொடுவது மற்றும் முத்தி செய்வது கூடாது என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இப்புனிதத்தலங்களுக்கு வெளிநாட்டவர்களின் வருகை இன்னும் சில வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், தற்போதைக்கு, உள்ளூர் மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவின் திறப்பு, மகிழ்வை உருவாக்கியுள்ளது என்றும், புனித பூமியின் காலவர்களில் ஒருவரான அருள்பணி Francis Patton அவர்கள் கூறியுள்ளார். இதற்கிடையே, ஆண்டவரின் கல்லறைக் கோவில், இன்னும் மக்களுக்காக திறந்து விடப்படவில்லை என்பதும், தற்போது, அக்கோவிலுக்குள், புனிதத்தலங்களைக் காக்கும் ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. (AsiaNews)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...