Tuesday, 26 May 2020

நகைச்சுவை உணர்வுடைய நெப்போலியன்

நகைச்சுவை உணர்வுடைய நெப்போலியன் இரண்டாம் உலகப்போரின்போது ஐரோப்பிய படைகள்

எதிரி நாட்டுப் படைகள் எப்பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்களா, அதனால் என்ன? எப்பக்கமும் சுடலாம் என மகிழுங்கள், என்று சொன்னவர் மாவீரன் நெப்போலியன்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இரஷ்யாவில் தோல்வியுற்ற நெப்போலியன், அங்கிருந்து திரும்பும் வழியில், இரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு, தப்பமுயன்று, ஒரு தையல்காரரிடம் சரண் புகுந்தார். "என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!" என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். இரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் தங்கள் கத்திகளை சொருகிப் பார்த்தார்கள் வீரர்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்போலியன் தப்பிவிட்டார். அதற்குபின் பிரெஞ்சு படைகள் வந்து அவரைக் காப்பாற்றின. தையல்காரரிடம், வரங்களை கேட்கச் சொன்னார், நெப்போலியன்.
"முதலில் கடையை சீரமைக்க வேண்டும்", என்று அவர் கேட்க, "முடிந்தது" என்றார் நெப்போலியன். "அடுத்து" என கம்பீரமாக கேட்க, "எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள், ஒரே தொழில் போட்டி" என்று அவர் சொல்லவும், சிரித்துக்கொண்டே, "சரி, அடுத்து?" எனக் கேட்க, "அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினார்களே, எப்படி உணர்ந்தீர்கள் என்று தெரிஞ்சாகணும்!" என தையற்காரர் கேட்க, பதில் சொல்லாத நெப்போலியன், "கிளம்புங்கள்!" என படைகளிடம் சொல்லிவிட்டு, வெளியேறும்போது, சட்டென்று திரும்பி, படை வீர்ர் ஒருவரைப் பார்த்து, தையல்காரரின் தலையில் துப்பாக்கியை வைக்கச்சொல்லி, ஒன்று, இரண்டு, மூன்று என்றதும் சுட்டுவிடு என்றார். துப்பாக்கி, தையல்காரரின் தலையை குறிபார்த்தது. "ஒன்...டூ...த்ரீ!" என்றதும், அதீத மௌனம். குண்டு வெடிக்கவில்லை. வியர்த்துப்போன தையல்காரரைப் பார்த்து, "இப்படிதான் இருந்தது எனக்கு!" என்று சொல்லிவிட்டு கிளம்பினார் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவரிடம் இருந்தது.
மற்றொரு சமயம், நெப்போலியனின் படைத்தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். "அரசே! எதிரி நாட்டுப் படைகள் எப்பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்கள். அவ்வளவு தான்!" என்றபோது நெப்போலியன், "அதனால் என்ன? எப்பக்கமும் சுடலாம் என மகிழுங்கள்" என்றார்.
எத்துன்ப வேளையிலும், மனம் தளராமல் செயல்பட்டவர், மாவீரன் நெப்போலியன்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...