யாழில் அனுடிக்கப்பட்ட தந்தை செல்வாவின் 116 ஆவது பிறந்ததின விழா
Source: Tamil CNNதந்தை செல்வாவின் 116ஆவது ஜனனதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழர்களின் தந்தை என அழைக்கப்படும் செல்வநாயகத்தின் 116ஆவது ஜனனதினம் இன்று தமிழ் தந்தை செல்வா அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வுகள் யாழ்.பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அவரது பிறந்ததினத்தை அனுஸ்டித்தனர்.
இதன்போது முன்னாள் பேராயர் ஜெபநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி, வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன், பேராசிரியர் சிற்றம்பலம், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் பேராயர், தற்போதுள்ள சந்ததியினருக்கு நாம் எமது தலைவர்களையும் அவர்கள் வரலாறுகளையும் தெரியப்படுத்த வேண்டியது எமது கடமை. நாம் விட்டுச் செல்வதனை அவர்கள் தொடர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment