Sunday, 20 April 2014

மூழ்கிய கப்பலில் இருந்து உடலங்களை மீட்பதில் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் தென்கொரியா

மூழ்கிய கப்பலில் இருந்து உடலங்களை மீட்பதில் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் தென்கொரியா

Source: Tamil CNN
தென்கொரியாவில் கடந்த புதன்கிழமை கடலில் கவிழ்ந்த கப்பலுக்குள் நுழைய மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினர் பல தடவைகளில் முயன்றும், வலுவான நீரோட்டமும், நீர் கலங்கலாகி பார்க்க முடியாது இருப்பதும் அவர்களது வேலைக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது.
ஒரு மீட்புக் குழுவால் கப்பலின் ஒரு ஜன்னல் வழியாக மூன்று உடல்களைப் பார்க்க முடிந்தது ஆனால் கண்ணாடியை உடைத்து உடல்களை மீட்க அவர்களால் முடிந்திருக்கவில்லை என தென்கொரிய கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திரும்பி வருவதற்கு உதவியாக நெடிய கயிற்றோடு நீரில் மூழ்கித் தேடிவரும் மீட்புக் குழுவினரால் கப்பலின் மேல் தளங்களை அடைய முடிந்துள்ளது. ஆனாலும் அவர்களால் கப்பலின் அறைகளுக்குள் இன்னும் செல்ல முடியவில்லை.
270 பேருக்கும் அதிகமானோரின் நிலை இன்னும் உறுதிசெய்யப்படாமல் உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கூட மாணவர்களாவர்.
இந்தக் கப்பலின் தலைமை மாலுமியும் இரண்டு இளநிலை அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கதி தெரியாமல் இருப்போரின் உறவினர்களிடம் முதல் தடவையாக மூழ்கிய கப்பலுக்குள் நடந்துவரும் தேடுதல் பணியைக் காட்டும் வீடியோ ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றி இருட்டாக இருக்கும் அந்த வீடியோவில், மூழ்கித் தேடுபவர் ஒருவர், கப்பலின் பக்கவாட்டில் தடவித் தடவி நகர்ந்து செல்லும் காட்சி வந்தது.
தேடுதல் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என உறவினர்கள் சிலர் அதிகாரிகளிடம் ஆத்திரத்துடன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதேநேரம் வேறுபல உறவினர்கள், தமது சொந்தத்தின் மரபணுத் தகவலை காட்டக்கூடிய பொருட்களை வழங்க ஆரம்பித்துள்ளனர். கப்பலில் இருந்து உடல்கள் மீட்கப்படும் சமயத்தில் அவற்றை அடையாளம் காண உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அதைச் செய்துள்ளனர்.
உடல்களை மீட்கும் பணி நிறைவடைய இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மிதக்கும் ராட்சத பளுதூக்கி இயந்திரங்கள் தற்போது அந்தக் கப்பலின் அருகே வந்து சேர்ந்துள்ளன.
கப்பலின் உள்ளே ஒருவர்கூட உயிருடன் இல்லை என்பதை உறுதிசெய்யும் வரையில் கப்பலை நிமிர்த்த முயலப்போவதில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
so

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...