Sunday, 20 April 2014

பூனைக் குட்டியை ஈன்ற நாய்: தமிழ்நாட்டில் அதிசயம்

பூனைக் குட்டியை ஈன்ற நாய்: தமிழ்நாட்டில் அதிசயம்

Source: Tamil CNN
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் 3 குட்டிகள் ஈன்றது. இதில் 2 குட்டிகள் பூனை போன்று இருந்தது. ஒரு குட்டி நாய் போன்று காணப்பட்டது.
இவற்றில் 2 குட்டிகள் இறந்த விட்டன. பூனை போன்ற தோற்றத்தில் உள்ள ஆண் குட்டி மட்டுமே உயிருடன் இருந்தது. இதன் கால்கள் நாய் போலவும் உடம்பு மற்றும் வால் பகுதி பூனைக்குட்டி போன்றும் இருக்கிறது. இந்த பூனைக்குட்டி மியாவ், மியாவ் என்று கத்துகிறது.
நாயு-ம் குட்டியை கவ்வி தூக்கி சென்று பால் கொடுக்கிறது. பொதுவாக நாய்கள் பூனையை பார்த்தால் துரத்தும் தன்மை கொண்டது. ஆனால் இந்த நாய் தான்ஈன்ற குட்டி பூனை போல் இருந்தாலும் பாசத்துடன் பால் கொடுக்கிறது.இதனை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து நாய் உரிமையாளர் ஆறுமுகம் கூறுகையில் கடந்த 4 ஆண்டுகளாக நாய் வளர்த்து வருகிறேன். இப்போதுதான் குட்டி ஈன்று உள்ளது.
இதுதொடர்பாக கால்நடை டாக்டர் செல்வராஜ் கூறுகையில் நாயும் பூனையும் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை. ஜெனடிக்குறைபாடு காரணமாக இது போன்று பிறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
cat dog

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...