யாழ் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு சர்வதேச ஊடக அமைப்பு கண்டனம்
யாழ். வடமராட்சிப் பகுதியில் வைத்து சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
வடமராட்சி மாலுசந்தி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய சிவஞானம் செல்வதீபன் என்ற ஊடகவியலாளர் கடந்த 14ஆம் திகதி இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கானார்.
குறித்த ஊடகவியலாளர் தனது வீடு நோக்கி சென்று கொண்டு இருக்கும்போது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்களில் சென்ற இனந்தெரியாத நபர்கள் கம்பியால் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான சிவஞானம் செல்வதீபன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
செல்வதீபனது சகேதரர் காணாமற் போனமை குறித்து அவரது தாயார் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சென்றதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவஞானம் செல்வதீபன் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம் சிவஞானம் செல்வதீபன் மீதான தாக்குதலை கண்டித்துள்ளது.
ஊடகவியலாளர் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment