Sunday 20 April 2014

வீசா காலத்தை நீட்டிக்க முடியாது! BBC செய்தியாளருக்கு கைவிரித்த அரசாங்கம்

வீசா காலத்தை நீட்டிக்க முடியாது! BBC செய்தியாளருக்கு கைவிரித்த அரசாங்கம்

Source: Tamil CNN
உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான BBC ஊடகவியலாளருக்கு வீசா காலத்தை நீடிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. BBC ஊடக நிறுவனத்தின் இலங்கைப் பிராந்திய செய்தியாளரான சார்ளஸ் ஹலிலான்ட்இற்கே (Charles Haviland) இவ்வாறு வீசா வழங்க அரசாங்கம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குறித்த ஊடகவியலாளர் இலங்கையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஓராண்டு காலத்திற்கு வீசா காலத்தை நீட்டிக்குமாறு சார்ளஸ் விடுத்த கோரிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
Charles Haviland2
நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சிரேஸ்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் அழுத்தம் காரணமாக மூன்று மாத காலத்திற்கு வீசா நீடிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலம் மற்றும் யுத்த பின்னரான செய்திகளை சார்ளஸ் வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கில் சுதந்திரமாக செய்திகளை சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என சார்ளஸ் இதற்கு முன்னர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Charles Haviland


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...