Wednesday, 1 January 2014

2014 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
01-01-14 புதன்

புத்தாண்டு வாழ்த்துக்கள்.... புலர்ந்துள்ள 2014ம் ஆண்டில் வத்திக்கான் வானொலி குடும்பத்தினர் அனைவருக்கும், இன்னும் உலகில் வாழும் அனைவருக்கும் இறைவன் நிறைவான மகிழ்வையும் வளங்களையும் தந்தருளவேண்டுமென்று வாழ்த்துகிறோம். செபிக்கிறோம். இப்புதிய ஆண்டில் இவ்வுலகம் அமைதியையும், அன்பையும் அதிகம் அதிகமாக அனுபவிக்கவேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுவோம்.

நன்றி - http://ta.fancygreetings.com

அன்புள்ளங்களே, புலரும் புத்தாண்டு நாள் முதல், 'புனிதரும் மனிதரே' என்ற புதிய நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலி குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துகிறோம். புனிதம் என்றதும், ஏதோ வானத்தில், தொடமுடியாத தூரத்தில் இருக்கும் ஒரு நிலை என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் எழலாம். ஆனால், புனிதரெனப் போற்றப்படும் பலரின் வாழ்வைப் புரட்டிப் பார்த்தால், அவர்கள் மிக எளிதான வாழ்வை, அர்ப்பண உணர்வுடன், முழுமையாக வாழ்ந்ததால் இந்நிலையை அடைந்தனர் என்பதை உணரலாம்.
கடந்த அக்டோபர் மாதம் (அக்.02) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் பொது மறையுரையில் கூறிய அழகான கருத்து இதுதான்: "புனிதத்துவம் என்பது அசாதாரணச் செயல்களை ஆற்றுவதில் அல்ல, மாறாக, சாதாரணச் செயல்களையும் அன்புடனும், நம்பிக்கையுடனும் ஆற்றுவதில் அடங்கியுள்ளது" என்று கூறினார்.
திருத்தந்தையின் சொற்கள் எங்கள் உள்ளங்களில் தூண்டிய ஒரு சிந்தனை ஓட்டமே, 'புனிதரும் மனிதரே' என்ற நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. புனிதர்கள் வாழ்வில் நிகழ்ந்த வெகு சாதாரணமான நிகழ்ச்சிகளை, 'புனிதரும் மனிதரே' என்ற பகுதியில் இவ்வாண்டு முழுவதும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறோம்.
புனிதர்களைப் பீடமேற்றி வணங்கமட்டுமே முடியும், அவர்களைப் போல வாழமுடியாது என்று எண்ணிவரும் நமக்கு, 'புனிதரும் நம்மைப்போல் மனிதரே' என்ற உண்மையை உள்ளத்தில் பதிக்கவும், நாமும் புனிதராகலாம் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்க்கவும் இந்நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா. அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஓர் எளிய நிகழ்ச்சியைக் கேட்போம்:

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...