Tuesday, 17 May 2011

இலவசம் - பெருமை ‘குடி’மக்களையே சாரும்

இலவசம்  - பெருமை ‘குடி’மக்களையே சாரும்

2010-11 ஆம் ஆண்டில், மது உற்பத்தியின் மூலம் தமிழக அரசிற்கு கிடைத்த வருவாய் (Excise Duty) ரூ.6,733.90 கோடி. மது விற்பனையில் கிடைத்த விற்பனை வரி (Sales Tax) ரூ.5,757.63 கோடி. ஆக மொத்தம் அரசிற்கு மதுவின் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.12,491.53 கோடி.

2002 -2003 நிதியாண்டில் இருந்து (அதாவது முன்னாள் முதல்வர் ஆட்சிக் காலத்தில் இருந்து) 2010-11ஆம் நிதியாண்டு வரை மது விற்பனை மூலம் தமிழக அரசு பெற்றுள்ள மொத்த வருவாய் ரூ.56,639 கோடி! இதோடு நடப்பு நிதியாண்டில் வரும் வருவாயையும் சேர்த்தால் ரூ.71,000 கோடி ஆகும்!. மது விற்பனை மூலம் இந்த 9 ஆண்டுகளில் கிடைத்துவரும் இந்த வருவாயைக் கொண்டுதான் சத்துணவு முதல் கலர் டி.வி. வரை வழங்கப்படு்கிறது.

ஆ‌ண்டு வா‌ரியாக மது ‌வி‌ற்பனை வருவா‌ய் ‌விவர‌ம் :

2002 - 2003 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.2,828.09 கோடி -
2003 - 2004 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.3,639.00 கோடி - 28.67 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2004 - 2005 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.4,872.00 கோடி - 33.88 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2005 - 2006 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.6,086.95 கோடி - 24.94 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2006 - 2007 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.7,300.00 கோடி - 19.95 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2007 - 2008 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.8,822.00 கோடி - 20.85 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2008 - 2009 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.10,601.50 கோடி - 20.17 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2009 - 2010 ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.12,491.00 கோடி - 17.82 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2010 - 2011 ‌நி‌தியாண‌்டி‌ல் ரூ.14,033.00 கோடி - உ‌த்தேசமாக


இப்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் இலவசங்களால் இந்த செலவீனம் கொஞ்சம் அதிகரிக்கும். அதற்கேற்றாற்போல் மது விற்பனையும் (ஆண்டுக்கு 20 விழுக்காடு) அதிகரிக்கும் அல்லவா? அந்த வரி வருவாய் இந்தச் செலவு உயர்வை சரிக‌ட்டிவிடும்.

2006 ஆக இலவசங்கள் அனைத்திற்குமான ஆதாரம், மதுபான உற்பத்தியில் இருந்து கிடைக்கும் தீர்வை வருவாயும், அதனால் விற்பனை கிடைக்கும் விற்பனை வரியும்தான்.

ஆக இலவசம் என்பது ஆட்சிகளின் சாதனையல்ல, அது மது அருந்துவோர் அளிக்கும் மறைமுக ‘கொடையால்’ வழங்கப்படுகிறது. எனவே, இதற்கான பெருமை ‘குடி’மக்களையே சாரும். ஆட்சியாளர்களையல்ல! 



No comments:

Post a Comment