Tuesday, 10 May 2011

Catholic News - hottest and latest - 09 May 2011

1. Aquileia மற்றும் Venice ஆகிய நகரங்களில் திருத்தந்தையின் திருப்பயணம்

2. திருத்தந்தை - சமூகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் விசுவாசத்தைக் கொணர வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை

3. புதிய அருளாளர் திருத்தந்தையின் நற்செய்தி அறிவிப்புப்பணி தொடர்கிறது

4. கெய்ரோவில் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல் தாக்குதல்

5. வியட்நாமிலும் சீனாவிலும் கிறிஸ்தவர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள்

6. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு

7. இலங்கையில் 2 லட்சம் சிறார்கள் படிப்பைக் கைவிடுகின்றனர்

8. உலகின் மிகவும் வறிய 48 நாடுகள் அடுத்தப் பத்து ஆண்டுகளில் பாதி குறைக்கப்பட வேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. Aquileia மற்றும் Venice ஆகிய நகரங்களில் திருத்தந்தையின் திருப்பயணம்

மே 09,2011. கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்தாலியின் வடபகுதியில் உள்ள Aquileia மற்றும் Venice ஆகிய நகரங்களில் மேய்ப்புப் பணி சார்ந்த திருப்பயணம் மேற்கொண்டார்.
மிதக்கும் நகரம் என்று புகழ்பெற்ற வெனிஸ் நகரின் தெருக்களாக விளங்கும் கால்வாய்களில் திருத்தந்தை, அவரது முன்னோடியான அருளாளர் இரண்டாம் ஜான் பாலைப் போல, அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்றில் பயணம் செய்தார்.
திருத்தந்தை வெனிஸ் நகரில் பயணம் மேற்கொண்ட அதே ஞாயிறன்று, இத்தாலியின் Lampedusa என்ற துறைமுகம் நோக்கி பல அகதிகளை ஏற்றி வந்த படகு பாறைகளில் மோதிச் சிதறியது. அப்படகில் பயணம் செய்த சுமார் 400 அகதிகள் காப்பாற்றப்பட்டனர்.
அகதிகளை எப்போதும் வரவேற்று வாழ்வளிக்கும் பணிக்கு திருச்சபை அழைக்கப்பட்டுள்ளதென்று வெனிஸ் நகரில் திருத்தந்தை இஞ்ஞாயிறன்று  ஆற்றிய மறையுரையில் குறிப்பிட்டார்.
திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் 300000 மக்கள் கலந்து கொண்டதாகவும், இவர்களில் பலர் Croatia, Slovenia, Austria, Germany ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்ததாகவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


2. திருத்தந்தை - சமூகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் விசுவாசத்தைக் கொணர வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை

மே 09,2011.  விசுவாசம் என்பது கலாச்சார மற்றும் சமூக பாரம்பரியங்களையும் தாண்டியது, அதன் மதிப்பீடுகளை, அரசியல் உட்பட அனைத்துத் துறைகளுக்கும் கிறிஸ்தவர்கள் கொணர வேண்டிய தேவை உள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியின் வெனிஸ் நகரில் இஞ்ஞாயிறன்று ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் கலந்துகொண்ட திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, பல்வேறு துன்பங்களையும் சித்ரவதைகளையும் தாண்டி வந்துள்ளகிறிஸ்தவம், இன்று தன் உண்மை நிலைகளை இழந்து, மக்களின் சமூக மற்றும் கலாச்சாரக் கூறுகளில் தன் மேம்போக்கான வாழ்வைக்கொண்டிருப்பதையே காண முடிகிறது என்றார்.
இறந்து உயிர்த்த கிறிஸ்துவிலான  விசுவாச அனுபவம், நம் வாழ்வின் பாதையை ஒளிர்விக்காமல் இருப்பது குறித்த அக்கறையற்ற நிலைகளையும் சுட்டிக்காட்டி, கவலையை வெளியிட்டார் திருத்தந்தை.
துன்ப துயரங்கள், அநீதிகள் ஆகியவை கண்டு மனந்தளரும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை அவரின் வார்த்தை மற்றும் அவரின் திரு உடல் திரு இரத்த திருவருட்சாதனம் மூலம் மீண்டும் கண்டுகொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் அவர்.
வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்து பெருமளவான மக்கள் அகதிகளாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்று வரும் இந்நாட்களில், இத்தாலியர்கள் மனிதாபிமானத்துடன் அவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்தினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.


3. புதிய அருளாளர் திருத்தந்தையின் நற்செய்தி அறிவிப்புப்பணி தொடர்கிறது

மே 09,2011.  திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அருளாளராக அறிவிக்கப்பட்ட நாட்களில் அவர் சக்தியுடன் திரும்பி வந்தது போன்ற உணர்வை, செபத்திலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டிருந்த விசுவாசிகளிடையே காண முடிந்தது என்றார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
அந்நாட்கள் இறை அருளின் நாட்களாக இருந்தன என தன் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஒக்தாவா தியேஸ்' என்பதில் அறிவித்த இயேசு சபை குரு, அருளாளர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இரவும் காலையும் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தைச் சுற்றி காத்திருந்த கூட்டத்தில், சிறு குழந்தைகளைக் கொண்ட எண்ணற்ற குடும்பங்களைக் காணமுடிந்தது, இக்குழந்தைகளுக்கு முன்னாள் திருத்தந்தையைத் தெரியாதெனினும், இவர்கள் திருத்தந்தையைத் தெரிந்த இளைய சமுதாயத்தின் குழந்தைகள் என்றார்.
அஞ்ச வேண்டாம் என அனைவருக்கும் தன் வாழ்நாளின்போது அழைப்பு விடுத்த புதிய அருளாளர் திருத்தந்தை, இன்றும் வானுலகில் இருந்துகொண்டு உலகில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு உதவிக்கொண்டிருக்கிறார் என மேலும் கூறினார் திருப்பீடப்பேச்சாளர்.


4. கெய்ரோவில் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல் தாக்குதல்

மே 09,2011. கடந்த சனிக்கிழமை இரவு எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஓர் இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பலால் காப்டிக் ரீதி கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் இரு கோவில்கள் தீக்கிரையாகியுள்ளன.
ஓர் இஸ்லாமியரைத் திருமணம் செய்துள்ள கிறிஸ்தவப் பெண் மதம் மாறுவதற்குத் தடை செய்யப்பட்டு, கிறிஸ்தவர்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ளார் என்ற ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் கெய்ரோவின் புறநகர்ப் பகுதியான புனித மேனாஸ் கோவிலை இவ்வன்முறை கும்பல் தாக்கியுள்ளது.
இதற்கிடையே, இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி, இஞ்ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களிலும் அந்நாட்டு கிறிஸ்தவர்கள் ஊர்வலங்களை மேற்கொண்டுள்ளனர்.
மதப் பகைமையை வளர்த்து, ஆட்சியைப் பிடிக்க முயலும் Salafists என்ற இஸ்லாமிய அடிப்படை வாதக்குழுவே இவ்வன்முறைகளுக்குக் காரணம் என்று செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
எகிப்தின்  8 கோடி மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.


5. வியட்நாமிலும் சீனாவிலும் கிறிஸ்தவர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள்

மே 09,2011.  வியட்நாமில் மத சுதந்திரமும் நிலச்சீர்திருத்தங்களும் வேண்டி கிறிஸ்தவர்கள் நடத்தி வரும் போராட்டங்களில் பலர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் உள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காணாமற்போயும் உள்ளனர்.
லாவோஸ் நாட்டுடனான வியட்நாம் எல்லைப்பகுதியில் கிறிஸ்தவர்கள் உரிமைகள் கேட்டு நடத்திய போராட்டத்தின்போது வியட்நாம் மற்றும் லாவோஸ் பாதுகாப்புத் துருப்புகள் கடந்த செவ்வாயன்று நடத்தியத் தாக்குதலில் 17 கிறிஸ்தவர்கள் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர்.அரசால் கைப்பற்றப்பட்ட தங்கள் சொந்த நிலங்களைக்கேட்டுப் போராடி வரும் கிறிஸ்தவர்கள் மீது வியட்நாம் அரசுத் துருப்புக்கள் நடத்தும் தாக்குதலில் இதுவரை 39 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அப்பகுதி கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஐந்து வாரங்களாக சீனாவில் கிறிஸ்தவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்கள் தொடர்பாக  இஞ்ஞாயிறன்று 15 கிறிஸ்தவர்களைக் கைது செய்துள்ளது அந்நாட்டு காவல்துறை.
சௌவாங் கிறிஸ்தவச் சமூகம் அப்பகுதி பூங்கா ஒன்றில் செப வழிபாடு ஒன்றை நடத்த முயன்றபோது இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
தங்களுக்கு ழிபாட்டு உரிமையும், ழிபாட்டுத் லங்களும் வேண்டும் எனபோராடி ரும் சிலசீனக் கிறிஸ்தக் குழுக்களின் அங்கத்தினர்கள் 264 பேர் ந்தநான்கு வாரங்களில் கைது செய்யப்பட்டுள்ளர் எனசெய்தி நிறுவங்கள் தெரிவிக்கின்ற‌.


6. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...