Tuesday, 17 May 2011

நகைசுவைகள்

 நகைசுவைகள்
 
போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,
உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்.
அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?

ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை
நினைச்சுக்கிட்டீங்களா?
இல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....!

ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன்
பண்ணப் போறீங்க...?
நீங்கதானே....ஆபரேஷனை "தள்ளி வைக்கச்" சொன்னீங்க...!

டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"
ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!
ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?

குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..
குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல்
போயிருப்பார் என்றுதான்....

அந்த ஆள் உண்மையிலேயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகமா
இருக்கு...
ஏன்?
துப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...!

சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!
ஏன்..?
பந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...!

எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே?
நான் ஓடவேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்!

ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?
சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."

ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"
டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!

அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"
மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!

அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல துப்பினேன்
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக
தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??

ஆசைகள் இல்லாத மனிதனே இல்லை "
EXAMPLE:
மனிதர்கள் யாரும் ஆசை படக் கூடாது என்று "ஆசை " பட்டார் புத்தர்..!
ஆசைப்படக் கூடாது என்று சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைபட்டா என்ன தப்பு ?

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்..
ஆசிரியர்: !!!


உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா,எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!(ஜஸ்ட் ஜோக்)

டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்
நடிகர்: இல்லை 200நாள் ஓடணும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்......
நடிகர்: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?

அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூணு பேர்தான்..........

மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிள்ளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட்
இருக்கிறதைத்தான் அப்படி சொல்லி இருக்கார்.!!

மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!
ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!
முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!
அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!

கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;
"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்."
" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி டா..செல்லம்

ஆசிரியர்: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..
மாணவர்: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..
ஆசிரியர்: ஏண்டா???
மாணவர்: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போடுறாங்க சார்... அதான்..

ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்.

உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால்
தினமும் அரை மணி நேரம் சிரித்தீர்கள் என்றால் பாதி நோய் உங்களை விட்டுப் போகும்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...