Thursday, 30 April 2015

சென்னையை சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியூயார்க் நீதிபதியாக பதவியேற்பு

சென்னையை சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியூயார்க் நீதிபதியாக பதவியேற்பு

ராஜராஜேஸ்வரி
ராஜராஜேஸ்வரி
சென்னையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நேற்றுமுன்தினம் பதவியேற்றார். இதன் மூலம் இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இப்போது 43 வயதாகும் ராஜராஜஸ்வரி தனது 16-வது வயதில் அமெரிக்கா சென்று குடியேறினார். முன்னதாக ரிச்மாண்ட் மாகாண மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவரை நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக மேயர் பிளாசியோ நியமித்தார்.
ராஜ ராஜேஸ்வரியுடன் சேர்த்து சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மேலும் 27 நீதிபதிகளும் நேற்று பொறுப்பேற்றனர். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ராஜ ராஜஸ்வரி இப்பதவியில் இருப்பார்.
ராஜராஜேஸ்வரி வழக்கறிஞ ராக இருந்தபோது குழந்தைகள் உரிமை, குடும்ப வன்முறை வழக்குகளில் திறமையாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி பெற்றுத்தந்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாசார நிகழ்வுகள் மற்றும் கோயில் விழாக்களில் பங்கேற்றுள்ள ராஜ ராஜேஸ்வரி தனது குழுவினருடன் பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களை அரங்கேற்றம் செய்துள்ளார். அவரது தாய் பத்மா ராமநாதனின் பெயரில் பத்மாலயா நாட்டிய அகாடமியை நடத்தி வருகிறார். 
Source: FB./The Hindu.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...