Monday 27 April 2015

இயக்குநர் வ.கௌதமன் உருவாக்கிய “இது இனப்படுகொலையா இல்லையா?” ஆவணப்படம் வெளியீடு

இயக்குநர் வ.கௌதமன் உருவாக்கிய “இது இனப்படுகொலையா இல்லையா?” ஆவணப்படம் வெளியீடு

Source: Tamil CNN. gowthamதமிழீழ மண்ணில் நடந்த இனப்படுகொலைகளை மட்டுமே உள்ளடக்கிய உக்கிரமான தொகுப்பாக இயக்குநர் வ.கௌதமனால் உருவாக்கப்பட்ட ஆவணப்படம் “இது இனப்படுகொலையா இல்லையா?” என்கிற பெயரில் வருகின்ற மே மாதம் பதின்மூன்றாம் (13.05.2015) திகதி சென்னையில் வெளியிடப்படுகிறது. மனித மனங்களை உலுக்க போகும் இப்படைப்பு உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் மேற்ப்பார்வையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ மண்ணை எல்லாள மன்னன் கட்டி ஆண்டது முதல் வரிசை படுத்தப்பட்டு வெள்ளையர்கள் கைவசப்படுத்தி இறுதியில் சிங்களவர்களிடம் நம் மண்ணை விட்டு சென்றதை சொல்லி – பின்பு தந்தை செல்வா காலத்திலிருந்து தொடங்கிய இன அழிப்பின் ஆதாரங்களை அடுக்கி – முள்ளிவாய்க்கால் வரை நடந்த கொடூரங்களை இந்த உலகத்திற்கு உரக்க சொல்லப்போகிறது இவ் ஆவணப்படம்.
அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமை வகிக்க அய்யா காசி ஆனந்தன் அவர்கள் முன்னிலையில் இதுவரை தமிழீழத்திற்காக குரல் கொடுத்த அனைத்துக் கட்சி தலைவர்களையும், அனைத்து தமிழ் அமைப்புகளின் தலைமைகளையும் அழைத்து மிகப்பெரிய அளவில் இந் நிகழ்வு சென்னையில் நடைபெற இருக்கிறது.
இதற்கான விழா ஏற்பாடுகளை இயக்குநர் வ.கௌதமன் அவர்களும் , மாணவ அமைப்புகளும் ஏற்பாடு செய்து கொண்டுடிருக்கிறார்கள். இடமும்,நேரமும் விரைவில் அறிவிக்க இருப்பதாகவும், பெரும்திரளான தமிழர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்றும் இயக்குநர் வ.கௌதமன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...