Friday, 10 April 2015

200 வருடங்கள் பழமையான பாதை இலங்கையில் கண்டுபிடிப்பு

200 வருடங்கள் பழமையான பாதை இலங்கையில் கண்டுபிடிப்பு

Source: Tamil CNN.KOTHMALE-TO-ANGURANGATHTHA-07 நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கும் கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கும் உட்பட்ட கண்டி நுவரெலியா பிரதான வீதியிலிருந்து புஸ்ஸல்லாவ பெரட்டாசி பாதையில் கந்தலா தோட்டம் வீடன் பிரிவிலிருந்து லூல்கந்துர தோட்டம் ஊடாக அங்குராங்கத்ததைக்கு செல்லும் சுமார் 200 வருடங்களாக பாவித்த பாதை கைவிடப்பட்டுருந்தது. முற்றிலும் பற்றைகளினால் மூடப்பட்டு காடாகமாறி கைவிடப்ட்ட நிலையில் காணப்பட்டமையால் தற்போது மக்கள் இந்த பாதையை பாவிப்பதிலிருந்து விழகியிருக்கின்றனர். பல வரலாற்றைக் கொண்ட இப்பாதையானது ஆரம்ப காலத்தில் ஒரு அடிப்பாதையாக காணப்பட்டது. அது அங்குராங்கத்தையும் கொத்மலையையும் இணைக்கும் ஒரு பாதையாக காணப்பட்டது. அக்காலத்தில் தேயிலையை முதன் முறையாக இலங்கைக்கு கொண்டு வந்த ஜேம்ஸ் டெயிலரும் இந்த பாதை காணப்டும் பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போதும் அவர் வாழ்ந்த இடம் பாவித்த பொருட்கள், நாட்டிய தேயிலை இப்பிரதேசத்தில் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது. இந்த பாதையின் ஊடாகவே நுவரெலியா பிரதேச தோட்டங்களுக்கு தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தே தேயிலை கன்றுகள் குதிரை வண்டிகள் மூலம் விநியோகிப்பட்டுள்ளன. இன்று நாட்டின் பொருளாதாதத்திற்கு முக்கிய பங்காற்றும் தேயிலை உற்பத்திக்கு இந்த பாதை பெரும் காரணமாக இருந்துள்ளது.
காலப்போக்கில் இவ் அடிப்பாதை ஆங்கிலேயரினால் வாகனங்கள் செல்லும் பாதையாக மாற்றப்பட்டு குதிரை சவாரிகளும் நடாத்தப்பட்டன. ஆதிகாலத்தில் அங்குராங்கத்தயில் நெல் விவசாயம் முடிவுரும் போது. கொத்மலையில் நெல் விவசாயம் ஆரபிக்கப்பட்டுள்ளது.
அவ்வேலையில் விவசாயத்திற்கான நெல் உட்பட உழவிற்கு மாடுகளும் விவசாயிகளும் இப்பாதையின் ஊடாக கொத்மலைக்கும் அங்குராங்கத்தைக்கும் மாறி மாறி சென்றுள்ளனர்.
இடையில் மலையின் உச்சியில் இரு பக்களிலிருந்தும் வரும் மக்கள் கலைப்பரும் இடம் ஒன்றும் காணப்படுகின்றது. அந்த இடத்தில் மரம் ஒன்றினை தெய்வமாக மக்கள் வணங்கியுள்ளனர. தற்போதும் காணப்படும் இந்த மரத்தின் ஓட்டையில் மக்கள் காணிக்கை போடுவர் அதனால் அது “காணிக்கை மரம்” (சிங்களத்தில் பண்டுருகா) என்று அழைக்கலானது. மரத்தில் குறித்தளவு நீர் எப்பொழுதும் இருக்கும். இதுவே இந்த மரத்தினதும் மரத்திலான தெய்வத்தின் சக்தியுமாகும் உண்மையில் இந்த மரம் தெய்வீனமிக்க ஒரு விசித்தரமான மரமாகும்.
இப்பாதை காணப்படும் பிரதேசம் இயற்கை வனப்புமிக்க பாரிய காட்டு வன பிரதேசமாகும். இங்கு பல்வேறுப்பட்ட வியதகு அழகிய மரங்கள், பூக்கள், செடிகள், கொடிகள், பாசிகள், பல விதமான கொழுந்து கூடைகள் பின்னக் கூடிய மூங்கில்கள் மற்றும் மிருகங்கள், பறவைகள், காணப்டுகின்றன. சுற்றுலாதுறைக்கு மிகவும் பாதகமான பிரதேசமாகவும் காணப்டுகின்றது.
காலநிலை அடிக்கடி மாறி மாறி வரும் இடமாக குளிரும் வெயிலும் காணப்டுகின்றது. ஏழு முடக்கு என்ற ஒரு பிரதேசமும் காணப்படுகின்ளது. மலையில் ஏறும் போது 07 வளைவுகள் காணப்படுகின்றன. வளைவுகளுக்கு முடக்கு என்ற ஒரு பேச்சி மொழி உள்ளது. அதனால் இதனை ஏழு முடக்கு என்னு அழைக்கலானர். ஓவ்வொரு வளைவிலும் இலக்கம் இடப்பட்டிருந்தது. தற்போது அவை மறைந்து காணப்படுகின்றது.
இலங்கை வன விலங்கு இலாகாவிற்கு சொந்தமான இடங்களில் முன்னர் நாட்டப்பட்ட தூண்களும் காணப்படுகின்றன. பாதைகள் கற்களினால் பரவப்பட்டும் தார் போடப்பட்டும் உள்ளது. தற்போது இவை உடைந்து காணப்படுகின்றது. பற்றைகளினால் மூடப்பட்டுள்ள இந்த பாதையை மீள் அமைப்பதன் ஊடாக இழந்த பல பழைய தொடர்புகளை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யலாம்.
தற்போது ஒரு பக்கம் ஸ்டெலன்பேர்க் தோட்டமும் (கந்தளாய் தோட்டம்) மறுபுறம் லூல்கந்துர தோட்ட மாட்டுபட்டி) பிரிவும் காணப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் நல்ல உறவு முறைகள் திருமண பந்தங்கள் காணப்பட்ட போதும் தற்போது அவை பாதை மூடப்பட்டதினால் தடைப்பட்டுள்ளன. அதே போல் அங்குராங்கத்த கொத்மலை மக்களின் உறவு முறைகள் தடைப்பட்டுள்ளன.
பாரம்பரிய கலாச்சாரங்களும் மறைக்கப்ட்டுள்ளன.
மேற்படி மக்கள் சிவனொளிபாதமலைக்கும் இவ் வமியாகவே நடந்து செல்வதாக தெரிய வருகின்றது. குறித்த கலைப்பாரும் இடத்தில் காணிக்கை மரத்தில் காணிக்கை போட்டுவிட்டு மரத்தினையும் வணங்கிவிட்டு பார்த்தால் சிவனொளிபாதமலை தெரியும் அங்கிருந்து சிவனொளிபாத மலையை தரிசிப்பதும் வழக்கம்.
இவ்வாறு பல வரலாற்றைக் கொண்ட இந்த பாதை கைவிடப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். இதனை கருத்தில் கொண்டு கொத்மலை ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர் அகோக ஹொயரத் கொத்மலை பிரதேச செயலாளர். சேனாநாயக்க அவர்களின் முயற்சியால் இந்த வரலாற்றுப் பெருமைமிக்க பாதையை திருத்தி மீண்டும் மக்கள் பாவனைக்கும் இழந்த வரலாறுகளை மீண்டும் புத்துயிர் படைக்க ஏற்பாடுகள் மேற்க்கொள்ள்பட்டுள்ளன.
இந்த பாதை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கரசிங்க அவர்களிடம் எடுத்துக் கூறியதற்கு இணங்க 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் புணர் நிர்மாணம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் ஒரு கட்டமாக கொத்மலை பிரதேச செயலகத்தின் பிரதச செயலாளர், செயலகத்தின் அனைத்து ஆண் அதிகாரிகள், கொத்மலை ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர் அகோக ஹொயரத உட்பட பொலிஸாரின் உதவியுடன் மேற்படி பாதையை துப்பரவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது.
எதிர் வரும் காலங்களில் பிரதமர் காரியாலயத்தின் உயர் அதிகாரிகளினால் அடிக்கல் நாட்டும் வைபவமும் நடைபெறவுள்ளது. உண்மையாகவே இப்பாதையை அமைப்பதன் ஊடாக நுவரெலியா செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு சென்று ஜேம்ஸ் டெயிலர் பங்களா உட்பட இயற்கை காட்சிகளை பாரவையிடுவர். நாட்டிற்கும் நல்ல வருமானம். இழந்த தோட்ட மக்களினதும் கொத்மலை மற்றும் அங்குராங்கத்த மக்களினதும் உறவுகளும் புத்துயிர் பெரும் என்பதில் ஐயமில்லை.

KOTHMALE-TO-ANGURANGATHTHA-08
KOTHMALE-TO-ANGURANGATHTHA-09
KOTHMALE-TO-ANGURANGATHTHA-10
KOTHMALE-TO-ANGURANGATHTHA-011
KOTHMALE-TO-ANGURANGATHTHA-11
KOTHMALE-TO-ANGURANGATHTHA-12
KOTHMALE-TO-ANGURANGATHTHA-14
KOTHMALE-TO-ANGURANGATHTHA-021
KOTHMALE-TO-ANGURANGATHTHA-031
KOTHMALE-TO-ANGURANGATHTHA-041
KOTHMALE-TO-ANGURANGATHTHA-051
KOTHMALE-TO-ANGURANGATHTHA-061
KOTHMALE-TO-ANGURANGATHTHA-151

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...