Thursday, 30 April 2015

கூகுள்நிறுவனத்தின்சர்வதேசஉச்சிமாநாட்டில் நெல்லை பள்ளி 9ம் வகுப்பு மாணவி K.விசாலினி (வயது 14)சிறப்புரை.

கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் நெல்லை பள்ளி 9ம் வகுப்பு மாணவி K.விசாலினி (வயது 14) சிறப்புரை.
கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாடு வரும் மே மாதம் 2ம்தேதி, சனிக்கிழமை டெல்லியில் நடைபெறஉள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 5 உலகசாதனைகள் படைத்த, பாளையங்கோட்டை IIPE லட்சுமிராமன் மெட்ரிக் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி K.விசாலினி (வயது 14), சிறப்புரை ஆற்றஉள்ளார்.
இவர் கணினிதுறையில், Cloud Computing in Google Apps for Education என்ற தலைப்பில், காலை10.30மணி-11.30 மணிவரை ஒரு மணிநேரம் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டு உள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில் விசாலினியைத் தவிர ஜப்பான் சாகாபல்கலைக்கழகப்பேராசிரியர் ஆன்ட்ருமியர்காப் (AndrewMeyerhoff) மற்றும் பிட்ஸ்பிலானி (BITS Pilani) பல்கலைக்கழககணினி துறைத்தலைவர் Dr.ராகுல்பானர்ஜி ஆகியோரும்உரையாற்றஉள்ளனர்.
கூகுள்நிறுவத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளி மாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல் முறைஆகும். இதற்கு முன்னதாக விசாலினி- மத்தியப்பிரதேச தலைநகர்போபால், கர்நாடகாவின் மங்களூரு, பெங்களூரு மற்றும் சென்னை உட்பட 8 சர்வதேச கணினி மாநாடுகளில் தலைமைவிருந்தினராகக்(ChiefGuest) கலந்துகொண்டு கீநோட் உரையாற்றியுள்ளார் (Keynote Address) என்பது குறிப்பிடத்தக்கது. 14வயதில், கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் சிறப்புரை ஆற்ற இருக்கும் நெல்லை பள்ளி மாணவி விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Source: FB.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...