Wednesday, 11 February 2015

கொடுமைப்படுத்திய கணவனை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மனைவி

கொடுமைப்படுத்திய கணவனை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மனைவி

Fire-mansource: Tamil CNN. தாலி கட்டிய கணவன் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் மனம் வெறுத்துப்போன மனைவி, அவனை மண்எண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ரகுநாத் கஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஜாகிர் ஷேக், தாரா பீவி தம்பதிகள். தனது மனைவி தாரா பீவியை, ஜாகிர் ஷேக் திருமணமானது முதல் தொடர்ந்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது கணவரின் கொடுமை தாங்காமல் மனம் வெறுத்துப்போன தாரா பீவி, வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவனின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். தீயினால் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் ஜாகிர் ஷேக் அலறி சத்தம் போட்டுள்ளார்.
ஜாகிர் ஷேக்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜாகிர் ஷேக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாரா பீவி மற்றும் அவரது உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...