Wednesday, 11 February 2015

ஆம் ஆத்மி வெற்றிக்கு உதவிய ஐஐடி மாணவர்கள்

ஆம் ஆத்மி வெற்றிக்கு உதவிய ஐஐடி மாணவர்கள்

source: Tamil CNN. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், அக்கட்சியின் பிரசார யுக்தியில் புதுமையை புகுத்திய மும்பை ஐஐடி மாணவர்கள் குழுவும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. பொதுவாக தேர்தலின் போது மக்களின் எண்ணத்தை அறிய அரசியல் கட்சிகள் சில யுக்திகளை பயன்படுத்துவதுண்டு. நேரில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அதற்கேற்ப தங்கள் வாக்குறுதிகளை அளிப்பது( செயல்படுத்த அல்ல), பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் மூலம் தங்கள் கட்சிக்கான வரவேற்பு முதலியவற்றை அறிந்து செயல்பட்டனர். இது பழைய ட்ரெண்டு.
மோடியே சொன்னபடி டிஜிட்டல் இந்தியாவுக்கான காலம் இது. பிரதமரே சொல்லிட்டாரு, அப்ப செஞ்சே ஆகணும் என்று அந்த டிஜிட்டல் ட்ரெண்டை பா.ஜ.கவுக்கு எதிராகவே ஏவியது ஆம் ஆத்மி கட்சி. ஆம் ஆத்மியின் கொள்கைக்கு ஆதரவு அளிக்கும் மும்பை ஐஐடி மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து, ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் மீது மக்களின் கண்ணோட்டத்தை சமூக வலைதளங்கள் மூலம் கணிக்கும் புது யுக்தியை கையாண்டனர். லட்சக்கணக்கான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் இருக்கும் இந்தியாவில் இது போன்ற முயற்சிகள் சற்று கடினம்தான். இருந்தாலும் தொழிநுட்பம் மூலம் இதனை செய்திருக்கிறார்கள் இந்த மாணவர்கள்.
அது என்ன தொழில்நுட்பம்?
டெல்லி மக்களின் தற்போதைய தேவை என்ன?, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகள் என்ன?, ஆட்சியாளர்களிடம் அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? ஆம் ஆத்மி கட்சியில் உள்ள குறைகளாக எதை விமர்சகின்றனர், ஆம் ஆத்மியின் பலவீனம் என்ன போன்ற காரசார விவாதங்களை ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இருந்து தனியாக பிரித்து எடுக்கும் வகையில் ஓர் தொழில்நுட்ப முறையை உருவாக்கினர். ஓட்டு போடுகிறார்களோ இல்லையோ, நிச்சயமாக சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவார்கள் என்று அறிந்த மாணவர்கள், இந்த தொழில் நுட்பத்தின் மூலம், சமூக வலைத்தளங்களில் கடந்த நவம்பர் மாதம் முதல் பதிவான குறிப்பிட்ட சில ஆயிரம் பதிவுகளை மட்டும் மாதிரிகளாக எடுத்து, அதை விரிவாக அலசி ஆராய்ந்து, வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்ற அறிக்கையை கட்சி மேலிடத்துக்கு அனுப்பினர். இந்த தொழில்நுட்பத்தால், அலைந்து திரிய அவசியமில்லை. உட்கார்ந்த இடத்திலேயே மக்களின் மன நிலையை அறிய முடியும் என்பதால் தேர்தல் செயல்பாட்டை துரிதபடுத்தவும், பிரசாரத்தை சீர்படுத்தவும் இது மிகவும் உதவியது.
இந்த மாணவர்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஆம் ஆத்மி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. இவை பெரும்பாலும் சாதாரண மக்களின் குரலாக இருந்ததால் ஆம் ஆத்மியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறது.
புதுமையை புகுத்துங்கள் என்று நாடு முழுவதும் முழங்கிய பாஜக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது எந்த புதுமையையும் செய்யவில்லை .மாறாக, எதிர்கட்சிகளை குறைகூறும் பழைய பிரச்சார முறையில் ஒரு புதுமையை புகுத்தியது. “நாங்கள் தேர்தல் அறிக்கை வெளியிட மாட்டோம். அதற்கு பதிலாக தினமும் கெஜ்ரிவாலுக்கு ஐந்து கேள்விகளை முன்வைப்போம். அதற்கு அவர் பதிலளிக்கட்டும்” என்று கெஜ்ரிவாலின் 49 நாள் ஆட்சியை குறை கூறும் ஐந்து கேள்வியை தினமும் கேட்டனர்.
கெஜ்ரிவாலை குறை கூற மெனக்கிட்ட பாஜக, தங்கள் குறையை சரி செய்ய மெனக்கிட்டிருந்தாலாவது, பாஜகவுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பிருந்திருக்கலாம்!
aap iit(2)

No comments:

Post a Comment