Wednesday, 11 February 2015

ஆண் மரபணுக் கொண்ட பெண் இரட்டைக் குழந்தைகள் பெற்றுச் சாதனை

ஆண் மரபணுக் கொண்ட பெண் இரட்டைக் குழந்தைகள் பெற்றுச் சாதனை

child meeratSource: Tamil CNN. ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ள மிகப்பெரிய சாதனை உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்துள்ளது. ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர், மருத்துவர்களின் மருத்துவ உதவியுடன், கருவுறும் ஒர்அரிய வாய்ப்பை பெற்று இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அந்த பெண், தான் தாயாக வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிகிச்சை வீண்போகாமல் அவரது கனவு தற்போது நனவாகியுள்ளது. இது ஆண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமமான ஆச்சர்யம் என்று மலட்டுத்தன்மை நிபுணர் டாக்டர் சுனில் ஜிண்டால் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பெண் தியா (பெயர் மாற்றம்), XY என பாலியல் மரபணு கோளாறு, வெளிப்படையான பெண்தன்மை மற்றும் பெண்களின் குணாதியசத்தைக் கொண்டவர். இப்படி இருப்பவர்களுக்கு கருவுறும் செயல்பாடும், கருமுட்டைகள் உற்பத்தியும் இருக்காது. இவையனைத்தும் கருவுறுதலுக்கு மிகவும் தேவையானது. மாதவிடாய் மற்றும் பருவமடைதல் போன்ற சம்பவங்களும் தியாயாவுக்கு கிடையாது. XY (ஆண்களின் குரோமோசோம்) குரோமோசோம்கள் கொண்ட அவரிடம் குறைகளை கண்டறிய மருத்துவர்கள் சோதனைகளை மேற்கொண்டனர். எனினும் அவருக்கு கிடைத்த கருணையாக, குழந்தைக்கான கருப்பை இருந்தது. அவருக்கு ஹார்மோன் மற்றும் சுரப்பிகளின் சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற அந்த பெண்ணின் ஆசையை நிறைவேற்ற இந்த சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
கர்ப்பம் அடையும் விதமாக கர்ப்ப பையை ஒருநிலையை அடைய செய்ய மிகவும் சவாலாக இருந்தது. மற்றவர்கள் நன்கொடையாக அளித்த கருமுட்டைகள் அவரின் கருப்ப பையில் வைக்கப்பட்டது. இதனையடுத்து பெண் கர்ப்பம் அடைந்தார். ஆனால் டாக்டர்களுக்கு மற்றொரு சவால் எழுந்தது. பெண்ணின் உடல்வாக்கு கருவுறுதலுக்கு ஏற்றவகையில் இல்லாதபோது எப்படி குழந்தையை 9 மாதங்கள் பெண்ணின் கர்ப்பப் பையில் வளரசெய்வது என்றுதான். இருப்பினும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் மூலம் பெண் பாதுகாப்பான முறையில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்” என்று டாக்டர் சுனில் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
இந்திய கருவுற்றல் நிபுணர் டாக்டர் கே.டி. நாயர் கூறுகையில், “இதுபோன்று ஆண் மரபணுக்கள் கொண்டு பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுப்பது என்பது மிகவும் அரிதானது. இதுபோன்று பிரச்னை கொண்ட பெண்கள் குழந்தை பெறுவது என்பது உலகம் முழுவதும் வெறும் 4 முதல் 5 வரையிலான பெண்களுக்கே சாத்தியமாகியுள்ளது. எனவே இது உண்மையிலே ஒரு மிகப்பெரிய சாதனைதான்” என்று கூறியுள்ளார்.
வரும் ஜூன் மாதம் போர்ச்சுக்கல்லில் நடைபெற உள்ள மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் தொடர்பான ஐரோப்பிய சமூக வருடாந்திர மாநாட்டில் இந்த மருத்துவச் சாதனை தொடர்பான அறிக்கையை முன்வைக்க டாக்டர்கள் முன்வந்துள்ளனர்.
ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர் கருவுற்று, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர், டாக்டர் நீனா மால்கோத்ரா தெரிவிக்கையில், “இது உண்மையில் ஓர் அரிய வளர்ச்சி ஆகிறது. மருத்துவ உதவியுடன் சாதாரண பெண்கள் குழந்தை பெறும் வெற்றி சதவீதம் வெறும் 35- 45 என்ற அளவிலே இருக்கும் நிலையில் இது வரலாறு படைத்துள்ளது. கர்ப்பத்தை வெற்றிபெற செய்வது என்பது மிகவும் சவாலானது” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...