Friday, 19 December 2014

உயிரோடு எரிக்கப்பட்டவர் (St. Nemesius of Alexandria)

உயிரோடு எரிக்கப்பட்டவர் 
(St. Nemesius of Alexandria)
     
எகிப்தின் அலெக்சாந்திரியாவைச் சார்ந்த Nemesius அவர்கள், கிறிஸ்தவ மெய்யியலாளர், "மனித இயல்பு" என்ற புகழ்பெற்ற நூலுக்கு உரிமையாளர். இந்நூல், கிரேக்க, அரபு மற்றும் கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூலாகும். அரிஸ்டாட்டில், காலன் ஆகியோரின் சிந்தனைகளின் அடிப்படையில் இவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். இரத்த ஓட்டம் பற்றிய வில்லியம் ஹார்வே அவர்களின் கண்டுபிடிப்புக்கு இவரது எழுத்துக்கள் முன்னோடியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இறைபராமரிப்பு பற்றியும் புகழ்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். மனித மூளை, பல்வேறு செயல்களுக்குப் பொறுப்பானது போன்ற கருத்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் இவர். Nemesius அவர்களின் வாழ்வு பற்றிய விபரங்கள் மிகக் குறைவாகவே கிடைத்தாலும், தற்போதைய சிரியா நாட்டு நகரமான Emesaவின் ஆயராகப் பணியாற்றியவர் என்று தெரிகிறது. இவர் மருத்துவம் படித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. உரோமையப் பேரரசர் தேசியுஸ் காலத்தில், கி.பி.307ம் ஆண்டில், அதிகாரிகள் இவரை பலவாறு சித்ரவதைப்படுத்தினர். பின்னர் கடுமையாய் அடித்தனர். அதிலும் அவர் இறக்காததால், அவரை உயிரோடு எரித்தனர். அலெச்காந்திரியாவின் புனித Nemesius விழா டிசம்பர் 19.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...