Wednesday, 3 December 2014

பறவையை தற்கொலைதாரியாக மாற்றிய தலிபான்கள்! பரபரப்புத் தகவல்கள் அம்பலம்

பறவையை தற்கொலைதாரியாக மாற்றிய தலிபான்கள்! பரபரப்புத் தகவல்கள் அம்பலம்

Source: Tamil CNN. பறவைகளின் உடலில் வெடி குண்டுகளைக் கட்டி அனுப்பி, பொது மக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த, தலிபான்கள் புதிய வியூகம் வகுத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ‘நேட்டோ’ படையுடன் தீவிரமாகப் போரிட்டு வருகின்றனர். மேலும் தற்கொலை படை அமைப்பின் மூலம் மனித குண்டு தயார் செய்து பொது மக்கள் கூடியிருக்கும் இடங்களில் வெடிக்கச் செய்து பெரும் நாசத்தை ஏற்படுத்துகின்றனர்.
அதை ராணுவம் மற்றும் போலீசார் கண்டுபிடித்து முறியடித்து விடுகின்றனர். எனவே, தற்போது தற்கொலை தாக்குதல் நடத்த புதுவிதமான நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அதாவது மனிதர்களுக்கு பதிலாக பறவைகளைத் தற்கொலை படையாக மாற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் பர்யாப் மாகாணம், துர்க்மெனிஸ்தான் எல்லையில் உள்ளது.


அங்கு மிகப்பெரிய பறவை ஒன்று சந்தேகப்படும் நிலையில் பறந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த ராணுவ அதிகாரிகள் பறவையைச் சுட்டு வீழ்த்தினர்.
பின்னர் சுடப்பட்ட பறவையைச் சோதித்து பார்த்த போது, அதன் இறக்கைகளில் பாட்டரிகளுடன் கூடிய மின் வயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் உடலில் தற்கொலை படை தீவிரவாதிகளின் உடையும் அதற்கேற்ற அளவில் அணிவிக்கப்பட்டிருந்தது கண்டு ராணுவத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடலில் வெடி பொருட்கள் இருந்தன. அதை வெடிக்க செய்யும் செல்போன் டெட்டனேட்டர்களும் இருந்தன. இதன் மூலம் மனிதர்களுக்கு பதிலாக பறவைகளை தற்கொலை படை தீவிரவாதிகளாக தலிபான்கள் மாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது ஆப்கானிஸ்தானில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
B3oMXETCIAEf9rv.jpg
Bird-Bomb.jpg
Bird-Bomb-and-Camera-Afghanistan.jpg

No comments:

Post a Comment