இந்தியாவின் இயற்கையமைப்பு
*
ஏறக்குறைய 460 கோடி ஆண்டுகளுக்குமுன் புவி தோன்றியது. ஏறக்குறைய 7 கோடி
ஆண்டுகளுக்குமுன் புவியியல் மாறுபாடுகளின் விளைவாக டெர்ஷியரி கால டெத்திஸ்
என்ற மிகப்பெரிய கடல் பகுதியிலிருந்து மேலெழுந்து இமயமலைகள் தோன்றின.
* புவியியல் கொள்கையின்படி, துவக்க
காலத்தில் பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே நிலப்பகுதியாக இருந்ததென்று
கருதப்படுகிறது. ஒரே தொகுப்பான அப்பகுதி பேஞ்சியா என்று அழைக்கப்பட்டது.
அதைச்சுற்றி பேன்தலாசா என்ற நீர்ப்பரப்பும் காணப்பட்டது.
* பேஞ்சியா நிலப்பகுதி டெத்திஸ் என்ற தாழ்வான இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு காலப் போக்கில், அந்த ஒற்றை நிலப்பகுதி சிறிது சிறிதாக இரண்டு பெரிய நிலப்பரப்புகளாக உடைந்தன.
* வடக்கில் உடைந்த பகுதி அங்காரா நிலப்பகுதி என்றும், தெற்கில் உடைந்த பகுதி கோண்ட்வானா நிலப்பகுதி என்றும் அழைக்கப்பட்டது.
*
அவ்வாறு தெற்கில் உடைந்த கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து
காலப்போக்கில் சிறிது சிறிதாகப் பிரிந்து வந்ததே இந்தியத்
துணைக்கண்டமாகும்.
* நிலத்தோற்றம், நில உள்ளமைப்பு, வடிகாலமைப்பு, காலநிலை, இயற்கைத்தாவரம், மண் ஆகிய இயற்கைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும் வட்டாரம், இயற்கை வட்டாரம் எனப்படும்.
* ஒருமித்த புவியியல் கூறுகளை உள்ளக்கிய ஒரு நிலப்பகுதி வட்டாரம் எனப்படுகிறது.
* இந்தியாவின் இயற்கையமைப்பை, வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள், வடக்கிலுள்ள சமவெளிப்பகுதிகள், தீபகற்ப பீடபூமிப் பகுதி என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். வடக்கிலுள்ள இமயமலைத் தொடர்கள், காஷ்மீர்
முதல் அருணாச்சலப் பிரதேசம்வரை கிழக்கு மேற்காக ஏறக்குறைய 2500 கி.மீ.
நீளம்வரை சங்கிலித்தொடர் போன்று பரவியுள்ளது. இமயமலை மத்திய ஆசியாவின்
பாமீர் முடிச்சில் இருந்து தொடங்குகிறது. பாமீர் முடிச்சு உலகின் கூரை என்று குறிப்பிடப்படுகிறது.
ஆதாரம் : தினமணி
No comments:
Post a Comment