Sunday, 1 December 2013

கத்தரிக்காய்

கத்தரிக்காய்

பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளன. மேலும் ஃபைபர் 11 விழுக்காடு, மாங்கனீசு 10 விழுக்காடு, பொட்டாசியம் 5.3 விழுக்காடுஃபோலேட் 4.5 விழுக்காடு, வைட்டமின் கே 3.5 விழுக்காடுசெம்பு 3.5 விழுக்காடு, டிரிப்தோபன் 3.1 விழுக்காடு, வைட்டமின் சி 3 விழுக்காடு, மெக்னீசியம் 2.8 விழுக்காடுவைட்டமின் பி 32.6 விழுக்காடு, கலோரி 1 விழுக்காடு ஆகிய சத்துக்களும் கத்தரிக்காயில் உள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்துச் சாப்பிடலாம். மேலும் உடல்சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம். தோல் நோயாளிகள், புண், ஒவ்வாமை உள்ளவர்கள் இக்காயைச் சாப்பிடக்கூடாது. இதனைச் சாப்பிட்டால் ஒவ்வாமை அதிகமாகும், அரிப்பையும் தூண்டும். அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், முதல் மூன்று மாதங்களுக்கு கத்தரிக்காயைச் சாப்பிடக்கூடாது. கத்தரிக்காய்,  பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவைக் கட்டுப்படுத்த கத்தரிக்காயைப் பயன்படுத்துகின்றனர்.  இக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலைக் குறைக்கும். கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆதாரம் : தினகரன்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...