Friday, 19 April 2013

Catholic News in Tamil - 18/04/13



1. Texas விபத்தில் பாதிக்கப்பட்டோருக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தி

2. நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கும் நறுமண 'spray' போல சூழ்ந்திருப்பவரா இறைவன் - திருத்தந்தையின் கேள்வி

3. திருத்தந்தை பிரான்சிஸ் - உள்ளுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் திருஅவை விரைவில் நோயுறும்

4. "நீதிகுடியரசுசட்டங்கள்" என்ற தலைப்பில் ஆர்ஜன்டினா ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கை

5. "உலகில் இன்று காணப்படும் சமயச் சுதந்திரம்" - வத்திக்கானில் நடைபெறும் TEDx கருத்தரங்கு

6. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

7. Boko Haram குழுவுக்கு நைஜீரிய அரசு வழங்க விழையும் பொது மன்னிப்பு குறித்து அந்நாட்டு ஆயர்கள் எச்சரிக்கை

8. அமெரிக்க கறுப்பின மக்களின் முதல் கத்தோலிக்க அருள் பணியாளர்Augustus Tolton நினைவைக் கொண்டாடும் திருப்பயணம்

9. பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சிறுவனின் உலக அமைதிச் செய்தி

------------------------------------------------------------------------------------------------------

1. Texas விபத்தில் பாதிக்கப்பட்டோருக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தி

ஏப்.18,2013. அமெரிக்காவின் Texas மாநிலத்தில் நிகழ்ந்துள்ள விபத்தில் இறந்தோர்காயமடைந்தோர்மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்காகவும் என்னுடன் இணைந்து செபியுங்கள் என்ற செய்தியைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் @pontifex என்ற தன் Twitter பக்கத்தில் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
Texas மாநிலத்தின் Waco நகருக்கருகே அமைந்துள்ள உரத் தொழிற்சாலையில் இப்புதன் இரவு  ஏற்பட்ட வெடி விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில்,இவ்வெண்ணிக்கை குறைந்தது 10 பேர் என்றும்அதிகப்படியாக70 பேர் என்றும் ஊடகங்கள் கூறி வருகின்றன. அப்பகுதியைச் சேர்ந்த 2600க்கும் அதிகமான மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கும் நறுமண 'spray' போல சூழ்ந்திருப்பவராஇறைவன் - திருத்தந்தையின் கேள்வி

ஏப்.18,2013. விசுவாசத்தின் வழியே வரும் மகிழ்வுஇயேசுவைச் சந்தித்தோம் என்பதில் வரும்  மகிழ்வு இவையே நமக்கு நீடித்த அமைதியை வழங்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
வத்திக்கானில் திருத்தந்தை தங்கியுள்ள புனித மார்த்தா இல்லத்தில் இவ்வியாழன் காலை வத்திக்கான் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுக்கு ஆற்றிய திருப்பலியில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
எத்தியோப்பிய அரசியின் நிதியமைச்சருக்குகிறிஸ்துவை அறிமுகப்படுத்திய பிலிப் அவர்கள் குறித்துதிருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய மறையுரையில்,அரசுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் உண்மையான ஆவலுடன் தேடும்போது இறைவனைக் காண முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நாம் விசுவசிக்கும் இறைவன்நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கும் நறுமண'spray' போல நம்மைச் சூழ்ந்திருப்பவராஅல்லது நம்மைச் சூழ்ந்திருந்து நம்மைக் காக்கும் ஓர் உறவா என்ற கேள்வியைத் தன் மறையுரையில் எழுப்பினார் திருத்தந்தை.
திருப்பலியின் இறுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தன் சிறப்பான நன்றியையும்வாழ்த்துக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் - உள்ளுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் திருஅவை விரைவில் நோயுறும்

ஏப்.18,2013. வெளியேச் செல்லாமல் உள்ளுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் திருஅவை விரைவில் நோயுறும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இவ்வாரம் சனிக்கிழமை முடிய Buenos Aires நகரில் நடைபெறும் ஆர்ஜென்டினா ஆயர்கள் பேரவையின் 105வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்திற்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்,இக்கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இயலாமைக்கு முதலில் வருத்தம் தெரிவித்துதன் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
தண்ணீரில் தோன்றிய தன்னுடைய பிம்பத்தையே பார்த்தவண்ணம் வாழ்வைச் செலவழித்ததாய் கிரேக்கப் புராணங்களில் சொல்லப்படும்Narcissusஐ அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் Narcissism என்ற போக்கை ஓர் எச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டியத் திருத்தந்தைதன்னையே பார்த்து இரசிக்கும் திருஅவைக்கும் ஆபத்து உள்ளது என்று எடுத்துரைத்தார்.
மக்கள் மத்தியில்அதுவும் சமுதாயத்தின் ஓரங்களில் உள்ளவர் மத்தியில் செல்லும் திருஅவையே வாழும் வலிமை பெறும் என்றும் தன் செய்தியில் திருத்தந்தை கூறினார்.
வர்த்தகச் சந்தை வளர்த்துவிட முயலும் அருள்பணி அடையாளங்களைப் புறந்தள்ளிஉண்மையான அருள்பணியை ஆயர்கள் வளர்த்துவருவதற்குத் தன் நன்றியையும்வாழ்த்துக்களையும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,கூடியுள்ள அனைத்து ஆயர்களுக்கும் தன்  வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

4. "நீதிகுடியரசுசட்டங்கள்" என்ற தலைப்பில் ஆர்ஜன்டினா ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கை

ஏப்.18,2013. ஆர்ஜன்டினா அரசு நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்கும் முயற்சியில் இன்னும் பொறுமையாகச் செயல்பட்டுபரந்துபட்ட ஆலோசனைகளைக் கேட்டு செயல்படவேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆர்ஜன்டினாவில் பணிபுரியும் 100க்கும் அதிகமான ஆயர்கள் இவ்வாரம் சனிக்கிழமை முடிய  Buenos Aires நகரில் மேற்கொண்டுள்ள ஆண்டு கூட்டத்தையொட்டி, "நீதிகுடியரசுசட்டங்கள்" என்ற தலைப்பில் ஆயர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் அரசுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீதித் துறையில் மாற்றங்களைக் கொணர அரசு கொணர்ந்துள்ள சட்ட வரைவுகள் மீது நாடு தழுவிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குடியரசை பெரிதும் வலுவிழக்கச் செய்யும் என்றும் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் Fides

5. "உலகில் இன்று காணப்படும் சமயச் சுதந்திரம்" - வத்திக்கானில் நடைபெறும் TEDx கருத்தரங்கு

ஏப்.18,2013. TEDx என்ற பெயரில் உலகின் பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கருத்தரங்களில் ஒன்றுஏப்ரல் 19வெள்ளிக்கிழமை,வத்திக்கானில் நடைபெறுகிறது.
"உலகில் இன்று காணப்படும் சமயச் சுதந்திரம்" என்ற தலைப்பில் நடத்தப்படும் TEDx கருத்தரங்குபாப்பிறை கலாச்சார அவையின் ஒத்துழைப்புடன் இவ்வெள்ளியன்று வத்திக்கானில் நடைபெறுகிறது.இக்கருத்தரங்கின் ஆரம்பத்தில் பாப்பிறை கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi உரையாற்றுகிறார்.
சமயம் என்பது வெறும் வரலாற்றுச் சின்னம் அல்லமாறாகஅது நமது வாழ்வை இயக்கும் ஒரு சக்தி என்ற கருத்தில் பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Technology, Entertainment and Design என்ற வார்த்தைகளின் சுருக்கமாக விளங்கும்TED கருத்தரங்குகள்1984ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் துவக்கப்பட்டன.
புகழ்பெற்ற இக்கருத்தரங்குகளின் ஒரு கிளையாக உருவாக்கப்பட்ட TEDxகருத்தரங்குகள் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளிலும் அண்மைய ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
பல நாடுகளில் இருந்து வருகைதரும் 800க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கில்இடிந்து விழுந்த நியூயார்க் வர்த்தகக் கோபுரங்களின் இடத்தில் உருவாக்கப்படும் 'விடுதலை கோபுரத்தை'வடிவமைத்த David Libeskind, Gloria Estefan என்ற புகழ்பெற்ற பாடகர்Vlade Divacஎன்ற புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர்ஆகியோர் உட்பட பல முக்கிய பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

6. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஏப்.18,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று தன் பொது மறைபோதகத்தை வழங்கியபின்னர்இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார்.
கர்தினால் Cormac Murphy O’Connor, மற்றும் பேராயர் Vincent Nichols ஆகியோர் அடங்கிய இக்குழுவினர் கடந்த சில நாட்களாக உரோம் நகருக்கு அருகே உள்ள ஓர் இல்லத்தில் தங்கி தியானம் மேற்கொண்டனர்.
இப்புதன் காலையில் ஆயர்கள் அனைவரும் புனித பேதுரு பசிலிக்காவின் கீழ்தளத்தில் அமைந்துள்ள புனித பேதுரு கல்லறையில் திருப்பலி நிகழ்த்தியபின்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைபோதகத்தில் கலந்து கொண்டனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எளிமையும்மென்மையும் பிரித்தானிய மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்றும்அவர் வார்த்தையாலும்,செய்கைகளாலும் தரும் சாட்சியங்கள் பல மக்களைக் கவர்ந்துள்ளன என்றும்Westminster பேராயர் Nichols வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் Zenit / ICN

7. Boko Haram குழுவுக்கு நைஜீரிய அரசு வழங்க விழையும் பொது மன்னிப்பு குறித்து அந்நாட்டு ஆயர்கள் எச்சரிக்கை

ஏப்.18,2013. Boko Haram என்ற அடிப்படைவாத குழுவுக்கு நைஜீரிய அரசு வழங்க விழையும் பொது மன்னிப்பு குறித்து அந்நாட்டு ஆயர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணெய் வளம் மிகுந்த தெற்கு நைஜீரியாவைக் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் Boko Haram குழுவினருடன் அரசு தீவிரமான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்தல்தெற்கு நைஜீரியா பகுதியிலிருந்து விலகிச் செல்லுதல் ஆகிய உறுதி மொழிகளின் அடிப்படையிலேயே இக்குழுவினருக்கு பொது மன்னிப்பு வழங்கும் முயற்சிகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டு பேராயர் Felix Alaba Job, ஆயர்களானStephen Dami, Felix Femi Ajakaye ஆகியோர் CNS செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
2010ம் ஆண்டிலிருந்து Boko Haram குழுவினரின் தாக்குதல்களுக்கு கிறிஸ்தவர்களே பெருமளவில் இலக்காக அமைந்தனர் என்று கூறும் CNSசெய்திக்குறிப்புஇதுவரை இந்த வன்முறைகளில் 1400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது.

ஆதாரம் CNS

8. அமெரிக்க கறுப்பின மக்களின் முதல் கத்தோலிக்க அருள் பணியாளர்Augustus Tolton நினைவைக் கொண்டாடும் திருப்பயணம்

ஏப்.18,2013. அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் முதல் கத்தோலிக்க அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்தந்தை Augustus Toltonஅவர்களின் நினைவைக் கொண்டாடும் ஒரு திருப்பயணத்தை வருகிற மேமாதம் சிகாகோ உயர்மறைமாவட்டம் ஏற்பாடு செய்து வருகிறது.
அமெரிக்க வரலாற்றில் அழிக்கமுடியாத கறையாகப் பதிந்துள்ள அடிமைகள் வரலாற்றுக்கு ஒரு கழுவாயாக இந்தத் திருப்பயணம் அமையும் என்று கறுப்பின கத்தோலிக்கர்களின் அலுவலக இயக்குனர், அருள்தந்தை Andrew Lyke, CNA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அமெரிக்காவின் Missouri பகுதியில் அடிமையாக உழைத்த கத்தோலிக்கப் பெண் Martha Jane என்பவருக்கு 1854ம் ஆண்டு பிறந்த Augustus, உரோம் நகரில் தன் குருத்துவ பயிற்சிகளைப் பெற்று1886ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
சிகாகோ நகரில் கறுப்பின மக்களுக்கென உருவாக்கப்பட்ட புனித மோனிகா பங்குதளத்தில் பணிபுரிந்த அருள்தந்தை Augustus, தன் 43வது வயதில் இறையடி சேர்ந்தார்.
இவரது எடுத்துக்காட்டான வாழ்வின் அடிப்படையில்2010ம் ஆண்டு இவரைப் புனிதராக்கும் முயற்சிகளை சிகாகோ உயர் மறைமாவட்டம் மேற்கொண்டது.

ஆதாரம் CNA

9. பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சிறுவனின் உலக அமைதிச் செய்தி

ஏப்.18,2013. பாஸ்டன் மாரத்தான் பந்தயத்தின் இறுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட எட்டுவயது சிறுவன் மார்டின் ரிச்சர்ட்உலக அமைதியை வலியுறுத்தும் வண்ணம் வரைந்திருந்த ஒரு படமும்வாசகமும் தற்போது இணையதளத்தில் வலம் வருகின்றது.
Lucia Brawley என்பவர் முகநூலில் (facebook) பதிவு செய்துள்ள இந்தப் படத்தைக் கண்டு பலரும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன்,குழந்தைகளிடமிருந்து அமைதிப் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.
சென்ற ஆண்டு தன் புது நன்மையைப் பெற்ற மார்ட்டின்பள்ளியில் வரைந்திருந்த ஒரு படத்தில், "மக்களை இனி ஒருபோதும் காயப்படுத்தவேண்டாம்அமைதி" என்ற வார்த்தைகளை வரைந்திருந்தான்.
மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட Bill Richard அவர்கள் பந்தயத்தை முடிப்பதைக் காண அங்கிருந்த அவரது மனைவிமகள்மற்றும் மகன் மார்டின் ஆகியோரில்மார்டின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டான். அவனது தாயும்,சகோதரியும் இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் உள்ளனர்.

ஆதாரம் Washington Post

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...