Friday, 19 April 2013

பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குமாறு தீர்மானம் நிறைவேற்றம்!


பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்குமாறு தீர்மானம் நிறைவேற்றம்!

Source: Tamil CNN
பொதுநலவாய மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று, பொதுநலவாய அமைப்பின் சட்ட வல்லுநர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் 18 வது சட்ட வல்லுநர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் சட்ட வல்லுநர் சங்கம், பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
இது, சர்வதேச அளவிலான தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
பொதுநலவாய அமைப்பின் வழக்குரைஞர் சங்க மாநாட்டில், பொதுநலவாய சட்டக் கல்வி கூட்டமைப்பு, பொதுநலவாய நீதவான் மற்றும் நீதிபதிகள் அமைப்பு ஆகியவையும் பங்கேற்று தீர்மானத்தை தாக்கல் செய்தன.
இந்தத் தீர்மானத்தில், வன்முறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இலங்கையை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிறைந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவது, பொதுநலவாய அமைப்பின் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்படும் தன்மையை ஏற்படுத்தும் என்றும், எனவே வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை வேறு நாட்டில் நடத்துவது தொடர்பாக பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு யோசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஏப்ரல் 26ம் திகதி நடைபெறும் பொதுநலவாய அமைச்சர்களின் செயற்குழுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...