வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு உதவும் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம்!
இந்தியா, இலங்கை தவிர்ந்த நாடுகளில் தமிழாசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள், தங்கள் துறையில் டிப்ளோமாப் பட்டம் பெறுவதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை தயாரித்து அதற்கென ஒரு துறையை உருவாக்கவும், சென்னையில் உலகத் தரத்தோடு இயங்கிவரும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் முன்வந்துள்ளது. மேற்படி புதிய த்pட்டத்தை உலக நாடுகளில் அறிமுகம் செய்வதற்கு உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைமைப் பீடம் மேற்படி பல்கலைக் கழகத்தோடு இணைந்து செயற்பட முன்வந்துள்ளது.
மேற்படி புதிய டிப்ளோமா திட்டம் தொடர்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு வி. எஸ். துரைராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழாசிரியர்கள் பட்டயப் படிப்பு ஒரு ஆண்டு காலத்திற்கு நீடிக்கும். இந்த புதிய திட்டத்தின் பிரதான நோக்கம் வெளிநாடுகளில் வாழும் தமிழ்ச் சிறார்கள் மற்றும் தமிழைக் கற்றுக்கொள்ள விரும்பும் பிற தமிழர்கள் தமிழை பிழையின்றி பேசவும், படிக்கவும் எழுதவும் தமிழ் மொழியின் பயன்பாடுகளை புரிந்துகொள்ளவும் உதவும் வகையில் தகுதிவாய்ந்த தமிழாசிரியர்களை உருவாக்குதலே ஆகும்.
இவ்வாறு தகுதி வாய்ந்த தமிழாசிரியர்கள் உருவாகும் பட்சத்தில் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழை தங்கள் வீட்டு மொழியாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். மேலும் இந்த ஆசிரியர்களின் உதவியினால் வெளிநாடுகளில் வாழும் குழந்தைகள் பிழையின்றி தமிழில் பேசவும் எழுதவும் கூடிய ஒரு சூழலும் பயிற்சியும் வழங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும்.
அத்துடன் வெளிநாடுகளில் வௌ;வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழிலும் சிறந்த பயிற்சியையும் பட்டத்தையும் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். அதோடு மட்டுமன்றி தமது தாய்நாட்டில் உயர் கல்வி கற்று பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்றும் உயர் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் தமிழர்கள் தங்கள் மொழிசார்ந்த துறையில் உயர் கல்வி பெறவும் வாய்ப்பு கிட்டுகின்றது.
இந்த தமிழாசிரியர் டிப்ளோமா திட்டத்திற்கு தேவையான கல்வித்தகுதி பின்வருமாறு:-
இந்தியக் கல்வி திட்டத்தின்படி குறைந்த பட்சம் 10ம் வகுப்பில் சித்தியடைந்திருக்க வேண்டும். அல்லது இலங்கைக் கல்வித் திட்டத்தின்படி கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். தென்னாபிரி;;க்க கல்வித்தி;ட்டத்தின்படி அந்நாட்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இந்த டிப்ளோமாப் கல்வியை தொடருவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள் இல்லை.
இந்த தமிழாசிரியர் டிப்ளோமா கல்வி ஓராண்டு பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த ஓராண்டில் இரண்டு பருவங்களையும் கொண்டது. வருடத்தில் சனவரி மாதத்தில் படிப்பு ஆரம்பமாகி டிசம்பர் மாதத்தில் முடிவடையும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பாடத்திட்டத்தின்படி ஒரு தமிழாசிரியர் முதல்பருவத்தில் தமிழ்மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு-1, அடிப்படைத் தமிழ் இலக்கணம், தமிழ் கற்பித்தல்-1- அடிப்படை நிலை ஆகிய பாடங்களையும் இரண்டாம் பருவத்த்pல் தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ் இலக்கிய வரலாறு-2, கணின்pத் தமிழும் இணைய வழிக்கல்வியும், தமிழ் கற்பித்தல்-2 உயர்நிலை ஆகிய பாடங்களை கற்கவேண்டும்.
வெளிநாடுகளில் இந்த தமிழாசிரியர் டிப்ளோமாப் பட்டத்தை பெறவிரும்பும் அன்பர்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளைகள் சென்னை எஸ் ஆர்எம் பல்;கலைக் கழகத்தின் பயிற்சி மையங்களாக இருந்து செயற்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி புதிய திட்டத்தின் முதலாவது வகுப்பு எதிர்வரும் 2014ம் ஆண்டு தம்pழர் திருநாளன்று ஆரம்பமாகும். மேலும் வாரத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில், வகுப்புக்கள் அந்த நாடுகளில் உள்ள பயிற்சி மையங்களில் நடைபெறவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும். மாணவர்கள் மேற்படி டிப்ளோமாப் பயிற்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இந்த மட்டத்தில் சேர்ந்து கொள்ளவிரும்பும் மாணவர்கள்
www.srmuniv.ac.in/tamilperayam என்னும் இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லது raja@cfsginc.com, அல்லது
imtc1974@yahoo.com ஆகிய மின்னஞ்சல் விலாசங்களில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment