Wednesday, 22 June 2011

Catholic News - hottest and latest - 18 June 2011

1. San Marino குடியரசிற்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம்

2. Ujjain மறைமாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்

3. தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிற்குத் திருப்பீடத்தூதர் நியமனம்

4. தென் சூடானில் இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறும் அபாயம்

5. கொரிய நாடுகளிடையே ஒப்புரவு வளர தென் கோரியக் கத்தோலிக்கர்கள் ஒப்புக்கொடுத்தத் திருப்பலி

6. சமூகப் பிரச்னைகளில் இளையத் தலைமுறையின் பங்கு குறித்து ஆய்வு

7. பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் அமைதிக்கான செபம்

8. 2011ல் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்தியா திட்டம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. San Marino குடியரசிற்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம்

ஜூன் 18,2011. இத்தாலி நாட்டிற்குள் தனி நாடாக இருக்கும் San Marino குடியரசிற்கு இஞ்ஞாயிறன்று திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
San Marino நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று காலை இத்தாலிய நேரம் 8 மணிக்கு, அதாவது இந்திய நேரம் காலை 11.30 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்று, முதலில் San Marinoவின் Serravalle திடலில் மக்களுக்குத் திருப்பலி நிகழ்த்துவார். அங்கு அரசியல் தலைவர்களைச் சந்தித்து உரையாடியபின், மாலையில் San Marino-Montefeltro மறைமாவட்ட இளைஞர்களைச் சந்தித்து, அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்குவார் பாப்பிறை.
61 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட San Marinoவின் மக்கள் தொகை 30,000 ஆகும். இங்குள்ள பெரும்பான்மை மக்கள் கத்தோலிக்கரே.


2. Ujjain மறைமாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்

ஜூன் 18,2011. Ujjain சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மார் ஜான் பெருமட்டம் இச்சனிக்கிழமைக் காலை இறைபதம் சேர்ந்தார்.
மறைந்த ஆயர் பெருமட்டம், 1921ம் ஆண்டு கேராளாவின் பாளை மறைமாவட்ட கக்கூர் எனுமிடத்தில் பிறந்து 1951ன் குருவாகவும் 1977ல் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998ம் ஆண்டு Ujjain மறைமாவட்ட ஆயர் பணிகளிலிருந்து இவர் ஓய்வு பெற்றார். ஆயர் பெருமட்டம் அவர்களின் அடக்கச் சடங்கு வரும் செவ்வாயன்று Ujjain பேராலயத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


3. தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிற்குத் திருப்பீடத்தூதர் நியமனம்

ஜூன் 18,2011. ASEAN எனப்படும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் திருப்பீடப்பிரதிநிதியாக பேராயார் லியோபோல்தோ ஜிரெல்லியை இச்சனிக்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பேராயர் ஜிரெல்லி, ஏற்கவே சிங்கப்பூர் ற்றும் கிழக்கு திமோருக்கானத் திருப்பீடத் தூதராகவும், லேசியா ற்றும் புருனேக்கானஅப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகவும், வியட்நாமிற்குள்ளேயே வாழாமல் அந்நாட்டிற்கானபாப்பிறைப் பிரதிநிதியாகவும் செயல்பட்டு ருகிறார்.


4. தென் சூடானில் இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறும் அபாயம்

ஜூன் 18,2011. தென் சூடானில் இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
சூடானின் தென்பகுதி தனிநாடாகப் பிரிந்துச் செல்ல இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தென் எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தால் வெளியேறி வருவதாகக் குறிப்பிட்ட எல் ஒபெய்த் மறைமாவட்ட ஆயர் Macram Max Gassis,  தென்பகுதி Kordofan  மாநிலத்தின் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பதட்டநிலைகளால் வெகு அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தென் சூடான் தனி நாடாகப் பிரிந்துச் செல்வதற்கு இந்த ஜனவரி மாதத்தின் கருத்து வாக்கெடுப்பில் மக்கள் பெருமளவில் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, வரும் ஜூலை மாதம் 9ந்தேதி அது தனி நாடாக உருவாக உள்ளது.


5. கொரிய நாடுகளிடையே ஒப்புரவு வளர தென் கோரியக் கத்தோலிக்கர்கள் ஒப்புக்கொடுத்தத் திருப்பலி

ஜூன் 18,2011. வட மற்றும் தென் கொரிய நாடுகளிடையே ஒப்புரவு வளர வேண்டும் என்று தென் கோரியக் கத்தோலிக்கர்கள் திருப்பலி ஒன்றை இவ்வெள்ளியன்று நிறைவேற்றினர்.
20000 விசுவாசிகள் கலந்து கொண்ட இத்திருப்பலியை Cheju மறைமாவட்ட ஆயர் Peter Kanga U-il தலைமையேற்று நடத்த 200 குருக்களுக்கும் மேல் இந்தக் கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
வட கொரியாவில் நிலவி வரும் வறுமை, பட்டினி ஆகிய செய்திகளும், இரு நாடுகளில் வாழும் குடும்பங்களுக்கிடையே நிலவும் பிரிவுகளும் தென் கொரிய மக்களைப் பாதிக்கின்றன என்று ஆயர் தன் மறையுரையில் கூறினார்.
இவ்விரு கொரிய நாடுகளுக்கிடையே தற்போது நிலவி வரும் பிரச்சனைகளைத் தீர்க்க, செபமும் திருப்பலியுமே சிறந்த வழிகள் என்பதை கத்தோலிக்கர்கள் உணர்ந்து வருகின்றனர் என்று இத்திருப்பலியை ஏற்பாடு செய்திருந்த அருள்தந்தை Timothy Lee Eun-hyung கூறினார்.
கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஒப்புரவுப் பணிக்குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்திருப்பலி கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. சமூகப் பிரச்னைகளில் இளையத் தலைமுறையின் பங்கு குறித்து ஆய்வு

ஜூன் 18,2011. சுற்றுச்சூழல் பாதிப்பு, வன்முறை மற்றும் மனித வியாபாரம் போன்ற சமூகப் பிரச்னைகளில் இளையதலைமுறையின் பங்கு குறித்து ஆராயும் நோக்கில் 60 நாடுகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டப் பிரதிநிதிகள் புது டெல்லியில் கூடி விவாதித்து வருகின்றனர்.
IYCS எனப்படும் அனைத்துலக இளைய கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் 14வது உலக அவைக்கூட்டத்தில் பங்குபெறும் இப்பிரதிநிதிகள், 'பதட்ட நிலைகளும் மோதல்களும் கொண்ட உலகில் மணவர்கள் வழங்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் இம்மாதம் 27ந்தேதி வரை கருத்தரங்கினை நடத்துவர்.
புதியதோர் உலகைக் கட்டியெழுப்புவதில், நம்பிக்கைகளையும் கண்ணோட்டத்தையும் வழங்க வேண்டிய இளையோரின் கடமையும் இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
மாணவப் பயிற்சியாளர்களுக்கான ஒரு பயிற்சிக்கூடமாக இருக்கும் இந்த 12 நாள் கருத்தங்கில் வன்முறை, சுற்றுச்சூழல், போதைப்பொருள் ஆகியவை குறித்த கருத்துப் பரிமாற்றங்களும், ஒவ்வொரு நாட்டு அனுபவப் பரிமாற்றங்களும் இடம்பெறுவதுடன், இளையோரிடையே விழிப்புணர்வையூட்டும் நிகழ்ச்சிகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...