Tuesday, 7 June 2011

Catholic News - hottest and latest - 06 June 2011

1. குரோவேசிய நாட்டில் திருத்தந்தை மேற்கொண்ட  திருப்பயணத்தின் இறுதிக்கட்ட நிகழ்ச்சிகள்

2. அயர்லாந்து திருச்சபையின் புதுப்பித்தலுக்கான பாதையில் உதவ நிறுவப்பட்ட திருப்பீடக் குழுவின் முதல் கட்ட சந்திப்புகள் நிறைவு

3. எய்ட்ஸ் நோய் குறித்து கத்தோலிக்கத் திருச்சபை கூறி வந்த அறிவுரைகளே ஏற்புடையவை

4. கோவாவைச் சுற்றி மேற்கொள்ளப்படும் கனிமச் சுரங்கத் தொழில்கள் பெரும் ஆபத்தை உண்டாக்கும் தலத்திருச்சபையின் கவலை

5. மருத்துவர்கள் உதவியுடன் நடத்தப்படும் தற்கொலைகள் குறித்து விவாதிக்க உள்ளனர் அமெரிக்க ஆயர்கள்

6. மணிலாவில் புகைப்பிடித்தலை பொது இடங்களில் ஒழிக்க வேண்டும் - ஆயர்கள் வலியுறுத்தல்

7. எய்ட்ஸ் பற்றி தெரியவந்து முப்பதாண்டுகள்

----------------------------------------------------------------------------------------------------------------

1. குரோவேசிய நாட்டில் திருத்தந்தை மேற்கொண்ட  திருப்பயணத்தின் இறுதிக்கட்ட நிகழ்ச்சிகள்

ஜூன் 06,2011. குரோவேசிய நாட்டில் தன் முதல் திருப்பயணத்தை நிறைவு செய்து ஞாயிறன்று இரவு உரோம் நகர் திரும்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் இரண்டு நாள் திருப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக Zagreb பேராலயத்தில் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் குருமடமாணவர்களைச் சந்தித்தத் திருத்தந்தை, அந்நாட்டின் அருளாளர் கர்தினால் அலோசியஸ் ஸ்டெப்பினாச்சை அவர்களின் எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.
1937ம் ஆண்டு முதல் 1960வரை Zagrebன் பேராயராக இருந்த கர்தினால் ஸ்டெப்பினாவிச் அச்சமற்ற ஒரு மேய்ப்பராக, திருச்சபையின் வழிகாட்டியாக இருந்ததால் துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக உயிரிழந்தார் என்றார் பாப்பிறை. அந்த கர்தினாலின் விசுவாச உறுதிப்பாட்டைப் புகழ்ந்த திருத்தந்தை,  இன்றைய குரோவேசிய ஆயர்கள் கிறிஸ்தவர்களிடையேயும், கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையேயுமான ஒப்புரவிற்கு உழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாம் கத்தோலிக்கர்கள் என்பது நம் வாழ்வின் நடவடிக்கைகளில் தெரிய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் குருமடமாணவர்களுடன் தன் சந்திப்பை முடித்தபின் திருத்தந்தை, அந்த பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கர்தினால் அலோசியஸ் ஸ்டெப்பினாச்சின் கல்லறையைத் தரிசித்து, சிறிது நேரம் செபித்தார்.
Zagreb பேராலயத்தில் ஏறத்தாழ 1மணி 15 நிமிடங்களைச் செலவிட்டத் திருத்தந்தை, அதன் அருகாமையில் உள்ள பேராயர் இல்லத்திற்கு நடந்து சென்று அங்கு குழுமியிருந்த குழுக்களைச் சந்தித்தபின் ஆயர்களோடு சிறிது நேரம் உரையாடினார். திருத்தந்தையின் திருப்பயணம் நிறைவேறும் தறுவாயில், குரோவேசியாவில் பெருமழை பெய்தமையால், அவருக்கெனெ Pleso சர்வதேச விமான தளத்தில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த வழியனுப்பு விழா நிகழ்ச்சி இடம்பெறவில்லை.
வழியனுப்பு விழா நிகழ்ச்சிக்கென தயாரித்து வைத்திருந்த தன் இறுதி உரையை பத்திரிகையாளர் வசம் ஒப்படைத்தத் திருத்தந்தை, ஞாயிறன்று இரவு வத்திக்கான் வந்தடைந்தார்.


2.  அயர்லாந்து திருச்சபையின் புதுப்பித்தலுக்கான பாதையில் உதவ நிறுவப்பட்ட திருப்பீடக் குழுவின் முதல் கட்ட சந்திப்புகள் நிறைவு

ஜூன் 06, 2011.  அயர்லாந்துத் திருச்சபை அதிகாரிகள் சிலரின் பாலின அடிப்படையிலான குற்றங்கள் குறித்து விசாரிக்கவும், அத்திருச்சபையின் புதுப்பித்தலுக்கான பாதையில் உதவவும் திருப்பீடத்தால் உருவாக்கப்பட்ட குழு அயர்லாந்தில் மேற்கொண்ட முதல் கட்ட சந்திப்புகள் நிறைவுக்கு வந்தன.
அயர்லாந்துத் தலத்திருச்சபை, துறவு இல்லங்கள், குருமடங்கள் ஆகியவை இடையேயான உறவுகள், அவைகளுக்கான ஆழமான ஆன்மீகப் புதுப்பித்தல், பாலின வகையிலானக் குற்றங்கள் குறித்த ஆய்வுகளின் தாக்கம், பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் ஆகியவை குறித்து இக்குழு அயர்லாந்தில்  ஆய்வுகளை மேற்கொண்டது.
இவ்வாய்வுகள் குறித்த விவரங்கள் திருப்பீடத்தின் பல்வேறு துறைகளுக்கும் தரப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஆய்வுகளையும் உள்ளடக்கிய விவரம் 2012ம் ஆண்டு துவக்கத்தில் திருப்பீடத்தால் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


3எய்ட்ஸ் நோய் குறித்து கத்தோலிக்கத் திருச்சபை கூறி வந்த அறிவுரைகளே ஏற்புடையவை

ஜூன் 06,2011. துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும்  பல பன்னாட்டு நிறுவனங்களும், பிற மத சார்புடைய நிறுவனங்களும் கத்தோலிக்கத் திருச்சபை எய்ட்ஸ் நோய் குறித்து கூறி வந்த அறிவுரைகளை ஏற்கும் மனநிலையில் உள்ளன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 5 இஞ்ஞாயிறன்று எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் முடியும் தருணத்தில், ஜெனீவாவில் உள்ள .நா.அமைப்பில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகச் செயலாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, இது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.
.நா.வின் கணக்குப் படி, HIV மற்றும் எய்ட்ஸ் நோயால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் 2 கோடியே 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஆணுறைகளைப் பயன்படுத்துவது எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் என்று பல்வேறு நிறுவனங்கள் கூறி வந்தபோது, தனி மனிதர்களின் சுயக்கட்டுப்பாடே எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் வழி என்று கத்தோலிக்கத் திருச்சபை கூறி வந்ததை சுட்டிக் காட்டிய பேராயர் தொமாசி, தற்போது பல்வேறு சமூகப் பணி நிறுவனங்கள் சுயக்கட்டுப்பாடு பற்றி கூறிவருவது நல்லதொரு போக்கு என்று கூறினார்.
இந்த நோயின் முப்பது ஆண்டுகள் நிலையைக் குறித்து அமெரிக்கப் பொது நலத்துறை நிபுணர் Matthew Hanley என்பவர் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், கத்தோலிக்கத் திருச்சபை இது நாள் வரை கூறிவந்த சுயக்கட்டுப்பாடே இந்த நோயை கட்டுப்படுத்தும் சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...