1. திருத்தந்தை: அனைவரையும் அரவணைத்துச் செல்வதே திருச்சபையின் உண்மைப் பண்பு
2. திருத்தந்தை: நாடுகளிடையே ஐக்கியத்திற்குத் தயாரிக்கிறார் தூய ஆவியார்
3. திருத்தந்தை: இரத்த தானம் புரிவோரை இளைஞர்கள் பின்பற்றட்டும்
4. வர்த்தக உலகம் கடைபிடிக்க வேண்டிய நன்னெறியை மையமாகக் கொண்டு வத்திக்கானில் கருத்தரங்கு நடைபெறும்
5. லாகூர் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் லாரன்ஸ் சல்தானாவுக்குப் பிரியாவிடை
6. குழந்தைத் தொழிலைத் தடை செய்யும் அரசு சட்டங்கள் இருந்தாலும் இந்தக் கொடுமை இன்னும் இந்தியாவில் தொடர்கிறது
7. இலங்கையில் சிறார் தொழிலாளர்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை: அனைவரையும் அரவணைத்துச் செல்வதே திருச்சபையின் உண்மைப் பண்பு
ஜூன் 13,2011. பெந்தகோஸ்து திருவிழாவான இஞ்ஞாயிறன்று உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் விசுவாசிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, திருச்சபையை அனைத்து மக்களின் திருச்சபையாக, தூய ஆவியார் எவ்விதம் உருவாக்கினார் என்பது குறித்து மறையுரையாற்றினார்.
திருச்சபை என்பது அனைத்து இனப்பிரிவுகள், வகுப்புப்பிரிவுகள், நாடுகள் என்ற எல்லைகளையெல்லாம் தாண்டி, தன் துவக்கக் காலத்திலிருந்தே அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒன்றாக உள்ளது என்ற திருத்தந்தை, அதுவே அதன் உண்மை பண்பு என்பது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.
'ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்' என்ற விவிலிய வார்த்தைகளை எடுத்துரைத்து, இந்த மகிழ்ச்சி என்பது ஏதோ ஒரு மகிழ்ச்சியில்ல, மாறாக, தூய ஆவியாரின் கொடையான முழு மகிழ்ச்சி என்றார் திருத்தந்தை.
சீடர்களைப் போல் நாமும் இயேசுவை விசுவாசத்தில் காண முடியும், ஏனெனில் அவர் விசுவாசத்தில் நம் முன் வந்து, தன் காயங்களைக் காட்டுகிறார் என்ற பாப்பிறை, நாமும் இறைவனின் பிரசன்னம் எனும் கொடைக்காக வேண்டுவோம், அப்போது மிக உன்னதக் கொடையான மகிழ்ச்சியைப் பெறுவோம் என்று உரைத்தார்.
2. திருத்தந்தை: நாடுகளிடையே ஐக்கியத்திற்குத் தயாரிக்கிறார் தூய ஆவியார்
ஜூன் 13,2011. பெந்தகோஸ்து விழாவில் நாம் சிறப்பித்த தூய ஆவி, அகிலத்தையும் நிறைத்து, நாடுகளிடையே ஐக்கியத்திற்குத் தயாரிப்பாராக என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது நம்பிக்கையை வெளியிட்டார் திருத்தந்தை.
பாஸ்கா மறையுண்மையின் நிறைவாக தூய ஆவி, அன்னை மரியோடு கூடியிருந்த திருத்தூதர்கள் மீது இறங்கி வந்தது, திருச்சபைக்கான திருமுழுக்காக இருந்தது எனவும் கூறினார் அவர்.
அப்போஸ்தலர்களின் மனித மொழியை இறைவனின் குரல் தெய்வீகமாக்கியது என்ற பாப்பிறை, தூய ஆவியின் மூச்சுக்காற்று அகிலத்தையும் நிறைத்து, விசுவாசத்தை ஊற்றெடுக்க வைத்து, உண்மையைக் கொணர்ந்து, நாடுகளிடையே ஐக்கியத்தையும் வளர்க்கிறது என்றார்.
செபத்திற்கு அர்த்தத்தை தரவும், நற்செய்திப் பணிக்கான ஆர்வத்தைத் தூண்டவும், நற்செய்தியைக் கேட்பவரின் இதயங்கள் கொழுந்து விட்டு எரியவும், கிறிஸ்தவ கலையும் வழிபாட்டு இசையும் தூண்டப்படவும் தூய ஆவியே உதவுகிறார் எனவும் தன் ஞாயிறு மூவேளை செப உரையின் போது கூறினார் பாப்பிறை.
3. திருத்தந்தை: இரத்த தானம் புரிவோரை இளைஞர்கள் பின்பற்றட்டும்
ஜூன் 13,2011. நாத்ஸி வதைப்போர் முகாமில் பலியாகி, இத்திங்களன்று ஜெர்மனியில் அருளாளராக உயர்த்தப்பட்ட இளம் குரு Alois Andritzki குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த விசுவாச சாட்சியத்தை உலக அமைதிக்கென அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
நாத்சி ஆட்சியை எதிர்த்ததற்காகவும், இளையோரிடையேயான பணிக்காகவும் விஷ ஊசி மூலம் 1943ம் ஆண்டுக் கொல்லப்பட்ட 28 வயது குரு ஆன்ட்ரிட்சிகியின் எடுத்துக்காட்டை விசுவாசிகளுக்கு முன்வைத்த திருத்தந்தை, அமைதிக்கான உறுதி நிறை பரிந்துரைகளை எடுத்துச் செல்லவும், ஆயதங்களின் இடத்தை பேச்சுவார்த்தைகள் பிடிக்கவும், சுயநலங்களை விட மனித மாண்புக்கு முக்கியத்துவம் வழங்கவும் தூய ஆவி நம்மைத் தூண்டுவாராக எனவும் வேண்டினார்.
இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் உலக இரத்த தான நாள் குறித்தும் எடுத்தியம்பிய பாப்பிறை, துன்பத்திலிருக்கும் சகோதரர்களுக்கு அமைதியான வழியில் உதவும் இரத்ததானம் செய்வோரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
உலக நல அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் 9 கோடியே 20 இலட்சம் மக்கள் இரத்த தானம் செய்கின்றனர்.
4. வர்த்தக உலகம் கடைபிடிக்க வேண்டிய நன்னெறியை மையமாகக் கொண்டு வத்திக்கானில் கருத்தரங்கு நடைபெறும்
ஜூன் 13,2011. தற்போதுள்ள நிலையிலேயே நின்று விடாமல், எப்போதும் உயர்வை நோக்கிச் செல்வதே திருச்சபையின் பயணம் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 16 மற்றும் 17, வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வர்த்தக உலகம் கடைபிடிக்க வேண்டிய நன்னெறியை மையமாகக் கொண்டு வத்திக்கானில் நடைபெற உள்ள ஒரு கருத்தரங்கைப் பற்றிப் பேசிய கருத்தரங்கின் தலைவரும், திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவருமான கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் பல வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் வத்திக்கான் அழைப்பின் பேரில் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2009ம் ஆண்டு வெளியிட்ட 'Caritas in Veritate' என்று சுற்றுமடலை மையப்படுத்தி இக்கருத்தரங்கின் விவாதங்கள் நடைபெறும் என்று கர்தினால் டர்க்சன் சுட்டிக் காட்டினார்.
வர்த்தக உலகம் திருச்சபையிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு, பாடங்கள் பல உள்ளன என்றும், திறந்த மனதோடு திருச்சபையின் படிப்பினைகளை ஏற்றுக் கொண்டால், வர்த்தக உலகம் பெரிதும் பயனடையும் என்பதை நான் நம்புவதாகவும் திருப்பீட </f
No comments:
Post a Comment