Saturday, 19 April 2014

சனியில் நிலவில் கடல்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சனியில் நிலவில் கடல்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சனிக் கோளின் ஆறாவது நிலவில், பனிப்பாறைகளுக்கு அடியில் கடல் இருப்பதை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
அமெரிக்காவின், ‘நாசா’ விண்வெளி மை யம் பல்வேறு கிரகங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
சனி கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, காசினி விண்கலம், அரிய கண்டுபிடிப்புகளை அளித்து வருகிறது.
இதுகுறித்து, நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது:
சனி கிரகத்தின், 500 கி.மீ., விட்டமுள்ள, ‘என்செலாடஸ்’ என்ற ஆறாவது நிலவில், 10 கி.மீ., ஆழத்தில் கடல்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலவின் மேற்பரப்பில், அடர்த்தியான பனிக்கட்டி பரவி யுள்ளதை, காசினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
இந்த நிலவின், கடல் தண்ணீரில், நுண்ணுயிர்கள் இருப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது.
கடந்த, 2005ல், இந்நிலவின் உட்பகுதியில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்த காசினி, அதன் தென்புலத்திற்கு அருகில் ஏராளமான துளைகளின் வழியாக, தண்ணீர் ஆவியாக மாறுவதையும் கண்டுபிடித்துள்ளது. இவ்வாறு விஞ் ஞானிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...