Friday, 19 April 2013

திராட்சை

திராட்சை

திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லாத் திராட்சை எனப் பல வகையுண்டு.
அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% திராட்சை இரசம் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது, 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது, 2% உலர் பழமாக்கப்படுகிறது.
திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன. இதில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'வைட்டமின்-சி', 'வைட்டமின்-ஏ', 'வைட்டமின்-கே' மற்றும் பீ-காம்ப்ளக்ஸ் குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் போன்றவையும் திராட்சையில் கிடைக்கிறது. திராட்சை பல சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.
உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் தகவலின்படி, உலகில் 75,866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சை பயிர் செய்யப்படுகிறது.

ஆதாரம் - விக்கிபீடியா
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...