Friday, 26 April 2013

கொய்யா

கொய்யா

நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது.
வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
நம் உடலைத்தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது கொய்யாப்பழம். மனிதரின் நோய் எதிர்ப்புச் சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. கொய்யாப்பழம் இரத்தத்தை நன்றாகச் சுத்திகரிப்பதால் இதய நோய்ப் பெருமளவில் குறையும். கொய்யாவின் தோலில்தான் அதிகச்சத்துக்கள் உள்ளன.
மது போதைக்கு அடிமையான மதுப் பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். புகைப் பழக்கம் உடையவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, இரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது.

ஆதாரம் ஒன்இந்தியா, விக்கிபீடியா & தினகரன்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...