Monday, 15 April 2013

புவியே சூரியனைச் சுற்றி வருகிறது -நிக்கலசு கொப்பணிக்கசு & பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 புவியே சூரியனைச் சுற்றி வருகிறது -நிக்கலசு கொப்பணிக்கசு & பட்டினப்பாலை பாடி கடியலூர் உருத்திரங்கண்ணனார்
 
சூரியன், சந்திரன் முதலாம் கோள்களும் நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்ற நம்பிக்கை எத்தனையோ நூற்றாண்டுகளாக மக்களை ஆட்டிப்படைத்துவந்தது!
சூரியன், சந்திரன் முதலாம் கோள்களும் நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்ற நம்பிக்கை எத்தனையோ நூற்றாண்டுகளாக மக்களை ஆட்டிப்படைத்துவந்தது! 

சூரியன் புவியைச் சுற்றி வரவில்லை; புவியே சூரியனைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தவர் யார்???
நிக்கலசு கொப்பணிக்கசு??

சத்தியமாக இல்லை… பெயர் தெரியாவிட்டாலும் அடித்துச் சொல்லலாம்… தமிழன் தானென்று!!!

எப்படி..?!

கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 2ஆம் நூற்றாண்டுக்குமிடையில் பாடப்பட்டவையான சங்க இலக்கியங்களில் ஒன்று “பட்டினப்பாலை”. “கடியலூர் உருத்திரங்கண்ணனார்” என்ற புலவரால் பாடப்பட்டது. இதில் வரும் 67 – 72 வரையான வரிகள் தான் மேற்கூறிய நம் ஊகத்துக்கு சான்றளிக்கின்றன:

“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்”

இதன் பொருள் இதுதான்…

“சூரியனை சுற்றி வரும் கோள்களைப் போல இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான்”

இலக்கியத்தைப் பொறுத்தவரை, உவமைக்கு பயன்படும் பொருள் ஏற்கனவே மக்களால் அறியப்பட்டதாகத் தான் இருக்கும். 

உதாரணமாக, “மதி போன்ற முகம்” என்ற உவமையைக் கவனித்தவுடன் நாம் முதலில் சந்திரனையே எண்ணுகிறோம்; பின்பு அதை குறிப்பிட்ட முகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். எப்போதும் உவமை என்பது, ஏற்கனவே அறிந்த ஒன்றுடன், தெரியாததை ஒப்பிட வைத்து குறிப்பிட்ட விடயத்தை எமக்கு இலகுவாகப் புரியவைக்கிறது.

இங்கோ, எதிரிகள் சூழ்ந்த மாவீரன் என்பதே, கோள்கள் சூழ்ந்த சூரியன் என்று தான் உவமிக்கப்படுகின்றது என்பது அக்காலத் தமிழர், ஞாயிறையே ஏனைய கோள்கள் சுற்றிவருகின்றன என்ற உண்மையை அறிந்திருந்தார்கள் என்பதற்கு சான்றாக இல்லையா???

எவ்வளவு பெரிய அறிவியல் உண்மையை, இந்தப் பழந்தமிழ் இலக்கியம், சர்வசாதாரணமாக, அதேவேளை மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறது??

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!
- Sivakaran Nithiyanandan
சூரியன் புவியைச் சுற்றி வரவில்லை; புவியே சூரியனைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தவர் -  நிக்கலசு கொப்பணிக்கசு

கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 2ஆம் நூற்றாண்டுக்குமிடையில் பாடப்பட்டவையான சங்க இலக்கியங்களில் ஒன்று “பட்டினப்பாலை”. “கடியலூர் உருத்திரங்கண்ணனார்” என்ற புலவரால் பாடப்பட்டது. இதில் வரும் 67 – 72 வரையான வரிகள் தான் மேற்கூறிய நம் ஊகத்துக்கு சான்றளிக்கின்றன:

“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்”

இதன் பொருள் இதுதான்…

“சூரியனை சுற்றி வரும் கோள்களைப் போல இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான்”

இலக்கியத்தைப் பொறுத்தவரை, உவமைக்கு பயன்படும் பொருள் ஏற்கனவே மக்களால் அறியப்பட்டதாகத் தான் இருக்கும்.

உதாரணமாக, “மதி போன்ற முகம்” என்ற உவமையைக் கவனித்தவுடன் நாம் முதலில் சந்திரனையே எண்ணுகிறோம்; பின்பு அதை குறிப்பிட்ட முகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். எப்போதும் உவமை என்பது, ஏற்கனவே அறிந்த ஒன்றுடன், தெரியாததை ஒப்பிட வைத்து குறிப்பிட்ட விடயத்தை எமக்கு இலகுவாகப் புரியவைக்கிறது.

இங்கோ, எதிரிகள் சூழ்ந்த மாவீரன் என்பதே, கோள்கள் சூழ்ந்த சூரியன் என்று தான் உவமிக்கப்படுகின்றது என்பது அக்காலத் தமிழர், ஞாயிறையே ஏனைய கோள்கள் சுற்றிவருகின்றன என்ற உண்மையை அறிந்திருந்தார்கள் என்பதற்கு சான்றாக இல்லையா?

எவ்வளவு பெரிய அறிவியல் உண்மையை, இந்தப் பழந்தமிழ் இலக்கியம், சர்வசாதாரணமாக, அதேவேளை மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறது??
Source: Via face book

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...