Wednesday, 24 April 2013

மாம்பழம்

மாம்பழம்

இராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும். மாம்பழத்தின் பூர்வீகம் தென்னிந்தியாவாகும். இந்தியாவில், மாம்பழங்கள் ஏறத்தாழ கி.மு 4000 ஆண்டிலேயே பயனில் இருந்தன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரெஞ்ச் மற்றும் போர்த்துக்கீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பீன்ஸ், மெக்சிகோ, ஆப்ரிக்க கண்டம் ஆகியவைகளில் அறிமுகம் செய்தனர்.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது இரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. மேலும், மாம்பழத்தில் இரும்புச்சத்து மிக அதிகமாக அடங்கியுள்ளது. குறிப்பிட்ட சில வகை மாம்பழங்களைத் தோலுடன் சாப்பிட்டால், உடல் எடை குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளன. மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாகச் சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...