Wednesday, 24 April 2013

உலகின் உயர்வான / உயரமான மலைகள்

உலகின் உயர்வான / உயரமான மலைகள்

உலகில் மிக உயர்வான மலை எது என்று கேட்டால், தயக்கமின்றி எவரெஸ்ட் என்று சொல்வோம். ஆனால், உலகின் மிக உயர்வான (Highest) மலை என்று சொல்லப்படும் எவரெஸ்ட், உலகின் மிக உயரமான (Tallest) மலை கிடையாது. அந்தப் பெருமைக்குரியது, ஹவாய் தீவுகளில் ஒன்றான Mauna Kea என்ற தீவில் அமைந்துள்ள மலை.
பூமியின் நிலப்பரப்பிலிருந்து, அதாவது, கடல் மட்டத்திலிருந்து அளக்கும்போது, எவரெஸ்ட் மலைச் சிகரம் 8850 மீட்டர்கள் உயர்ந்து காணப்படுகிறது. ஆயினும், ஒரு மலையின் முழு உயரத்தை அதன் அடிமட்டத்திலிருந்து அளக்க வேண்டும். அவ்வாறு அளக்கும்போது, Mauna Kea மலையின் மொத்த உயரம் 10000 மீட்டர்களுக்கும அதிகம். அதாவது, அது எவரெஸ்ட் மலையைவிட 1150 மீட்டர்களுக்கும் அதிக உயரமானது. இருப்பினும், இம்மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4205 மீட்டர்களே. மீதமுள்ள 5800 மீட்டர்கள் கடலுக்கடியில் அமிழ்ந்துள்ளன.
உலகின் மிக உயர்வான (Highest) மலைகள் என்ற பட்டியலில் முதல் 100 இடங்களைப் பெற்றுள்ள மலைகள் அனைத்தும், ஆசியாவில் அமைந்துள்ளன.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...