ஆப்பிள்
மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது உலகில் பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி, நெடுங்காலமாக
ஆப்பிள் உடல்நலத்திற்கு மிக நல்லது என்று கருதப்பட்டது. பலவிதமான புற்று
நோய்களைத் தடுக்கும் ஆற்றல் ஆப்பிள்களுக்கு உள்ளது என தற்போது
நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.
ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ்
மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும்
என்சைம்கள் குறைபாட்டை நீக்குவதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை
தடுக்கின்றன.
No comments:
Post a Comment