Wednesday, 15 June 2011

Catholic News - hottest and latest - 11 June 2011

1. ஐரோப்பாவில் வாழும் நாடோடி இனத்தவரின் பிரதிநிதிகள் 2000 பேருடன் திருத்தந்தையின் சந்திப்பு

2. எய்ட்ஸ் நோயாளிகளிடையே ஆற்றப்படும் மொத்தப் பணிகளுள் 25 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையால் மேற்கொள்ளப்படுகிறது

3. லாவோஸ் நாட்டின் வட பகுதியில் கிறிஸ்தவர்கள் மீதான கட்டுப்பாடுக்ள் அதிகரித்துள்ளன

4. Swazilandல் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து தென்மண்டல ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவை கவலை

5. கிறிஸ்தவ விரோதப்போக்கு அதிகரித்து வருவது குறித்து ஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை கவலையை வெளியிட்டுள்ளது

6. பெண்களுக்கு எதிரான குற்றம்: விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

----------------------------------------------------------------------------------------------------------------

1. ஐரோப்பாவில் வாழும் நாடோடி இனத்தவரின் பிரதிநிதிகள் 2000 பேருடன் திருத்தந்தையின் சந்திப்பு

ஜூன் 11,2011. ஐரோப்பாவில் வாழும் நாடோடி இனத்தவரின் பிரதிநிதிகளாக உரோம் நகர் வந்திருந்த ஏறத்தாழ 2000 பேரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 'அவர்கள் திருச்சபையின் ஓரங்களில் இல்லை, மாறாக, மையத்தில் உள்ளனர்' என்ற திருத்தந்தை 6ம் பவுலின் வார்த்தைகளுடன் உரை வழங்கினார்.
நாடோடி இனத்தவரைச் சேர்ந்த அருளாளர் Zeffirino Giménez  Malla மறைசாட்சியாக உயிரிழந்ததன் 75ம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்த அருளாளரின் பக்தி வாழ்வு ஒவ்வொரு நாடோடி இனத்தவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்று கூறினார்.
கடந்த காலங்களில் நாடோடி இனத்தவர் அனுபவித்துள்ள துன்ப துயரங்கள் குறித்தும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இரண்டாம் உலகப் போரின்போது அவர்களுள் பல ஆயிரக்கணக்கானோர் மரண முகாம்களில் சித்திரவதைப்பட்டு, கொல்லப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
இன்றைய காலத்தில், நாடோடி இனத்தவரின் மாண்பு குறித்து விழிப்புணர்வு அதிகரித்து, சூழல்கள் நல்லதை நோக்கி மாறிவருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார் பாப்பிறை.
ஐரோப்பிய நாடோடி இன மக்களுடன் தொடர்ந்து பணியாற்றிவரும் திருச்சபை, அவர்களிடையே நற்செய்தியை அறிவிப்பதற்கான துணிவையும், அர்ப்பணத்தையும் அம்மக்களிடமிருந்தே எதிர்பார்ப்பதாக திருத்தந்தை மேலும் கூறினார்.


2. எய்ட்ஸ் நோயாளிகளிடையே ஆற்றப்படும் மொத்தப் பணிகளுள் 25 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையால் மேற்கொள்ளப்படுகிறது

ஜூன் 11,2011. இவ்வுலகில் எயிட்ஸ் நோய்க்கிருமி பாதிப்பாளர்கள், மற்றும் எய்ட்ஸ் நோயுற்றோரிடையே ஆற்றப்படும் மொத்தப்பணிகளுள் 25 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையால் மேற்கொள்ளப்படுவதாக ,.நா. கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
எயிட்ஸ் நோய் குறித்த .நா. கருத்தரங்கின் இறுதி நாள் கூட்டத்தில், ஐநாவிற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட்டின் சார்பில் உரைநிகழ்த்திய திருப்பீடக்குழுவின் உறுப்பினர் பேராசிரியை Jane Adolphe, எயிட்ஸ் நோயுற்றோரிடையே மேற்கொள்ளப்படும் பணிக்கென உலகம் முழுவதும் 1 இலட்சத்து 17 ஆயிரம் நல மையங்கள் மூலம் கத்தோலிக்கத் திருச்சபை மகக்களிடையே, குறிப்பாக சிறார்களிடையே பணியாற்றி வருகிறது என்றார்.
திருமணத்திற்கு முன்னும் திருமணத்திற்கு வெளியேயும் உடலுறவுகளில் ஈடுபடாமை, பொறுப்பற்ற நடவடிக்கைகளைக் கைக்கொள்ளாமை, நோய்க்கெதிரான மருந்துக்கள் கிடைக்க ஊக்கமளித்தல் போன்ற கொள்கைகளை வலியுறுத்தி கத்தோலிக்கத் திருச்சபை பணிபுரிந்து வருவதாகக் கூறினார் அவர்.
ஏழநாடுகளில் HIV கிருமிகளுடன் வாழும் 1 கோடியே 50 இலட்சம் மக்களுள் 52 இலட்சம் பேருக்கே மருந்துக்கள் கிடைப்பதாக உரைத்த திருப்பீடக்குழுவின் உறுப்பினர் Adolphe, எயிட்ஸ் நோயால் அனாதைகளான சிறார்கள் 1 கோடியே 60 இலட்சம் பேர் இவ்வுலகில் வாழ்வதாகவும் கவலையை வெளியிட்டு, சர்வதேச சமுதாயத்தின் அக்கறைக்கும் அழைப்பு விடுத்தார்.


3. லாவோஸ் நாட்டின் வட பகுதியில் கிறிஸ்தவர்கள் மீதான கட்டுப்பாடுக்ள் அதிகரித்துள்ளன

ஜூன் 11,2011. வியட்நாமில் உரிமைகள் கேட்டு கடந்த மாதம் கிறிஸ்தவர்களின் போராட்டங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, லாவோஸ் நாட்டின் வியாட்நாம் எல்லைப்பகுதியில் கிறிஸ்தவர்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் கவலையை வெளியிட்டுள்ளார்.
லாவோஸ் நாட்டின் லுவான் பிரபாங் நகரில் கிறிஸ்தவ மத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கத்தோலிக்கர்கள் முழு கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், தேவஅழைத்தல்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார் குரு ரஃபேல் ட்ரான்சுவான் நான்.
1975ம் ஆண்டு லாவோஸ் நாடு கம்யூனிச கட்டுப்பாட்டின் கீழ் வந்ததிலிருந்து லுவான் பிரபாங் பகுதியிலிருந்து ஒருவரே குருவாகியுள்ளதாகவும், ஒரு பெண் துறவி கூட உருவாகவில்லை எனவும் கூறினார் அவர்.
லுவான் பிரபாங் கத்தோலிக்கர்கள் பிற இடங்களுக்குப் பயணம் செய்வதற்கு அங்குள்ள மாநில அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டிய நிலையையும் சுட்டிக்காட்டினார் குரு ட்ரான்சுவான் நான்.


4. Swazilandல் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து தென்மண்டல ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவை கவலை

ஜூன் 11,2011. ஆப்ரிக்க நாடான Swazilandல் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து கவலையை வெளியிட்டுள்ள தென்மண்டல ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவை, மனித உரிமைகள் காக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதித்தலைவர்களின் ஒத்துழைப்பிற்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது.
ஆப்ரிக்கக் கண்டத்தின் ஒரே முடியாட்சி நாடான Swazilandல் வாழும் 10 இலட்சம் மக்களும், ஆட்சியாளரின் பாராமுக நடவடிக்கைகளால் பெரும் வேதனைகளை அனுபவித்து வருவதாக ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
Swazilandன் Manzini நகரில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டம், பாதுகாப்புத்துறையால் ஒடுக்கப்பட்டது குறித்து கவலையை வெளியிடும் ஆயர்கள், Swaziland அழிவிலிருந்து காப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாக விண்ணப்பித்துள்ளனர்.


5. கிறிஸ்தவ விரோதப்போக்கு அதிகரித்து வருவது குறித்து ஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை கவலையை வெளியிட்டுள்ளது

ஜூன் 11,2011. இன்றைய உலகில் கிறிஸ்தவ விரோதப்போக்கு அதிகரித்து வருவது குறித்து இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் ஆயர் பேரவை தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
பொதுநலனுக்கு எதிராகச் செல்லும் தீவிரவாதக் குழுக்களால் அரசியல் நோக்கங்களுக்காக மத வேறபாடுகள் பெரிதுபடுத்தப்படுவதாகக் குறைகூறும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் ஆயர் பேரவை, இத்தகையைப் போக்குகள் சமூகத்தில் ஆர்வமுடைய அனைத்துக் குழுக்களாலும் கண்டிக்கப்பட வேண்டும் என விண்ணப்பிக்கிறது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கு என்பது அவ்வப்போது நடப்பதல்ல, மாறாக சில இடங்களில் அது தொடர் நடவடிக்கையாக உள்ளது எனக்கூறும் ஆயர்களின் அறிக்கை, எகிப்து காப்டிக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்த கண்டனத்தையும் வெளியிட்டது.


6. பெண்களுக்கு எதிரான குற்றம்: விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

ஜூன் 11,2011. ஆள் கடத்தல், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றம், பாலியல் குற்றங்கள் குறித்து தமிழகத்தின் பள்ளிகள்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...