Saturday, 12 June 2021

ஐ.நா. அமைதிப்படையின் அர்ப்பணத்திற்கு நல்வாழ்த்து

 ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றும் இளைஞர்

1948ம் ஆண்டு மே 29ம் தேதி, ஐ.நா. அமைதிப்படை உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை, 72 பகுதிகளில், பல்வேறு நாடுகளின் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட இருபால் அமைதிப்படையினர் பணியாற்றியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இளையோரின் உயிர்த்துடிப்புள்ள பங்கேற்பின்றி, உலகில் அமைதியை நிலைநிறுத்த இயலாது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

“இளையோர், அமைதி, மற்றும், பாதுகாப்பு” என்ற தலைப்பில், மே 29, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, ஐ.நா. அமைதிப்படை உலக நாள் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா.வின் அமைதிப் பணிகளுக்கு, அப்படையின் இளையோர், புதுப்புதுக் கருத்துக்கள், நம்பிக்கை, மற்றும், புத்துணர்ச்சிகளைக் கொணர்ந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.    

அமைதிப்படையினரின் வீரத்துவப்ணிகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படவேண்டும் என்று உரைத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், இப்படையினர் தங்கள் உயிரைப் பணயம்வைத்து ஆற்றிவரும் பணிகளுக்கு, ஐ.நா. எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.  

காங்கோ சனநாயக குடியரசு, மத்திய ஆப்ரிக்கா, லெபனான் போன்ற பல்வேறு நாடுகளில் பணியாற்றும் ஐ.நா.வின் அமைதிப்படைகள், ஆயுதக்களைவு, சமுதாய வன்முறையை நிறுத்துதல், மக்களை ஒருங்கிணைத்தல் போன்ற நடவடிக்கைகள் வழியாக, நாட்டில் வன்முறையைக் குறைக்கவும், அமைதியை நீடிக்கச் செய்யவும், இளையோருடன் சேர்ந்து பணியாற்றிவருகின்றன என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

கடந்த ஆண்டிலும், இவ்வாண்டு சனவரியிலும், தங்கள் பணியின்போது உயிரிழந்த 129 ஐ.நா.வின் அமைதிப்படையினரை இந்நிகழ்வில் நினைவுகூர்ந்து, அவர்களுக்கு சிறப்பு மரியாதை செலுத்தினார், கூட்டேரஸ்.

1948ம் ஆண்டு மே 29ம் தேதி, ஐ.நா. அமைதிப்படை உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை, 72 பகுதிகளில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட ஆண் மற்றும், பெண் அமைதிப்படையினர் பணியாற்றியுள்ளனர். தற்போது 12 பகுதிகளில், 89 ஆயிரத்திற்கு மேற்பட்ட அமைதிப் படையினர் பணியில் உள்ளனர். (UN)

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...