Monday, 13 January 2014

தலைநகர் பரிசில் A Gun and A Ring திரைப்படத்திற்கு உற்சாகவரவேற்பு ! ஐரோப்பிய நகரங்களிலும் தொடர்கின்றது

தலைநகர் பரிசில் A Gun and A Ring திரைப்படத்திற்கு உற்சாகவரவேற்பு ! ஐரோப்பிய நகரங்களிலும் தொடர்கின்றது

Source: Tamil CNNஅனைத்துலக திரைவெளியில் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் சினிமா எனஅடையாளம் பெற்றுள்ள A Gun and A Ring திரைப்படம், தமிழ்மக்களை நோக்கி ஐரோப்பிய நகரங்களில் திரையிடப்பட்டுள்ள வருகின்றது.
ஐரோப்பாவின் முதற்திரையிடலாக தலைநகர் பரிசில் இடம்பெற்றிருந்ததோடு, சுவிசிலும் இரு நகரங்களில் திரையிடப்பட்டுள்ளது.
பிரென்சு தேசத்தின் சுதந்திரநாள் அணிவகுப்பு பிரதானமாக இடம்பெறும் சாம்சலீசே பெருவீதியில் ,தமிழர்களின் பாரம்பரிய இண்ணிய அணிவகுப்பில் இத்திரைப்படக்க கலைஞர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு அனைத்துலக திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து பாராட்டுத்தல்களையும் பரிசில்களையும் பெற்றிருந்த இத்திரைப்படமானA Gun and A Ring, புலம்பெயர் ஈழத்தமிழர்களது திரைமுயற்சிகளில் முக்கியமானதொரு பாய்ச்சலாக பலராலும் கருதப்படுகின்றது.
அந்தவகையில் பிரான்ஸ் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்திரையிடலில், A Gun and A Ring படத்தின் இயக்குனர் லெனின் எம் சிவம், தயாரிப்பாளர் விஷ்ணு முரளி, நடிகர் பாஸ்கி, நடிகை தேனுகா பங்கெடுத்திருந்தனர்.
பலரது உற்சாகத்தினையும் நம்பிக்கையினையும் பெற்றுள்ள இத்திரைப்படமானது ஐரோப்பாவின் பல நகரங்களில் தொடர்சியாக திரையிடப்பட இருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
0
1
2
3
4
5
6
7
8
9

No comments:

Post a Comment