தமிழ் சி.என்.என் இணையம் தடை செய்யப்பட்ட செய்தியானது ஈழத் தமிழர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது: யாழ். ஆயர் உருக்கம்
தமிழ் மக்களுக்கு செய்திகளினுடாக அவர்களின் அபிலாசைகளை நிறைவு செய்து வந்த தமிழ் சி.என்.என் இணைய செய்தி நிறுவனம் இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட செய்தியானது ஈழத் தமிழர்களுக்கு பெரும் கவலையாக அமைந்து உள்ளது என வணக்கத்துக்குரிய யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சி.என்.என செய்தி நிறுவனம் தடை செய்யப்பட்டது தொடர்பாக ஆயர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகங்களை அவர்கள் சுதந்திரமாக பணி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உண்மையான விசயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். தடை போடுவதினால் அல்லது நிறுத்தி வைப்பதினால் உண்மைகள் உறைந்து போய் விடாது.
நீதியான முறையில் மக்களுக்கு உண்மையான செய்திகளை வழங்கி வரும் தமிழ் சி.என்.என் நிறுவனத்தினர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் செய்திகளை மட்டும் மக்களுக்கு சொல்லவில்லை மக்களுக்கு அவர்களால் முடிந்தளவு உதவிகளை சமூகசேவையாக செய்து வருகின்றனர்.
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் மிகவும் இக்கட்டான நிலையில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களின் வாழ்வியலை ஊடகங்களால் தான் வெளிச்சத்துக்கு கொண்டு வர முடிந்தது.
தயவு செய்து இலங்கை அரசியல் பீடத்தில் இருப்பவர்களை கேட்கின்றேன் இந்த தமிழ் சி.என்.என் இணையத்தளத்திற்கு இருக்கும் தடைகளை நீக்கி தமிழ் மக்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றேன், என்றார்.
No comments:
Post a Comment