தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலை 6 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலை 6 நாட்கள் போலீஸ் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவா காவல்துறையின் கோரிக்கையை ஏற்று அம்மாநில செசன்ஸ் நீதிமன்றம், தேஜ்பாலை 6 நாட்கள் விசாரிக்க போலீஸிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
சக பெண் பத்ரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தேஜ்பால் நேற்று கைது செய்யப்பட்டார். நேற்றிரவு அவர் கொலை மற்றும் பாலியல் வல்லுறவுக்குற்றவாளிகள் மூவருடன் பொலிசாரால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment