Wednesday, 4 December 2013

அடிவயிற்றில் இதயம் – 24 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறார் இவர்

அடிவயிற்றில் இதயம் – 24 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறார் இவர்

source: Tamil CNN
சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிவயிற்றில் இதயத்துடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீனாவின் ஹினான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ ஷிலியாங்(வயது 24), முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்.
இவர் பிறக்கும்போது அடிவயிற்றில் இருந்து இதயம் துடிக்கும் சத்தம் கேட்டுள்ளது, இதனை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.நாட்கள் செல்ல செல்ல, ஷிலியாங்கின் இதயம் இடம் மாறி அடிவயிற்றில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த நிலையில் மகன் நீண்ட நாள் உயிர் வாழ மாட்டான் என்று கருதி அப்படியே விட்டு விட்டனர். இதனால் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை, கடினமான வேலை, ஓடினால் மூச்சி இறைப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பத்திரிக்கை செய்தி ஒன்றில் இதே போல் காக்ஜென்டியல் கார்டியாக் எக்ஸ்போஷர் சின்டம்ஸ் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்ட ஹூயாங் ரூங்மிக் என்ற வாலிபருக்கு கடந்த 2012ல் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து இதயத்தை இடமாற்றம் செய்து சாதனை படைத்தனை ஷிலியாங் படித்துள்ளார்.
இதேபோல் தானும் அறுவை சிகிச்சை செய்ய விரும்பி ஹெனான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் இதயத்தை விலா எலும்பு பகுதியில் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment