மூளையில் முள் குத்தினால் வலிக்காது...
நமது உடலின் கையிலோ, காலிலோ முள் குத்தினால், அதன் வலியை நமக்கு உணர்த்துவது நம் மூளை. ஆனால், மூளையில் முள் குத்தினால், நாம் வலியை உணர வழியில்லை. உடலின் வேறுபகுதிகளில் உருவாகும் வலிகளை உடனுக்குடன் நமக்கு உணர்த்தும் நமது மூளை, தன்னில் உருவாகும் வலியை உணர முடியாது. ஏனெனில், நமது உடலின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நரம்புகளின் நுனியில், வலி உணரும் வாசல்கள் (Pain receptors) உள்ளன. இவை, நமது மூளைப்பகுதியில் கிடையாது.
தலைவலி வருகிறதே என்ற கேள்வி எழலாம். நமது மூளையைச் சுற்றியுள்ள திசுக்கள், நரம்புகள், தோல், எலும்புகள் ஆகியவற்றில் உருவாகும் அழுத்தம், தலைவலியாக உணரப்படுகிறது. இதை உணர்த்துவதும் நமது மூளைதான்.
வலியை மழுங்கச் செய்யும் மருந்து ஏதுமின்றி, மூளையில் அறுவைச் சிகிச்சைகள் செய்யலாம். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமல்ல. ஏனெனில் மூளையை அடைவதற்கு, வலி உணரும் பல பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். எனவே, மூளை அறுவைச் சிகிச்சையின்போது பொதுவான மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
ஆதாரம் : இணையத்தளம்
No comments:
Post a Comment