Monday 17 June 2013

மும்பை துறைமுகத்தில் 2-ம் உலகப்போர் குண்டுகள்,ஏவுகணைகள் கண்டுபிடிப்பு!

மும்பை துறைமுகத்தில் 2-ம் உலகப்போர் குண்டுகள்,ஏவுகணைகள் கண்டுபிடிப்பு!

Source: Tamil CNN
மும்பை துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கப்பல்கள் வரும் பிரதான பாதையை ஆழப்படுத்தி விரிவுபடுத்தும் பணியில் 2 தூர்வாரும் கப்பல்கள் ஈடுபட்டன. அப்போது புதையுண்டிருந்த ஏராளமான வெடிகுண்டுகள் வெளியே வந்தன.
அவற்றை ஆய்வு செய்தபோது, அனைத்தும் வெடிக்காமல் இருந்தன. எனவே அவை பாதுகாப்பாக மீட்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சுமார் 90 வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த குண்டுகள் 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்தியதாக இருக்கலாம் என தெரிகிறது.
83 வெடிகுண்டுகள் பல ஏவுகணைகள், கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மும்பை துறைமுகத்தைச் சுற்றி இவ்வாறு வெடிக்காத குண்டுகள் கைப்பற்றுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த முறை அதிக அளவில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
1944ம் ஆண்டு ஆயுதங்கள் ஏற்றி வந்த எஸ்.எஸ். போர்ட் ஸ்டைக்கின் என்ற கப்பல் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. தற்போது கிடைத்த குண்டுகள் அந்த கப்பலில் வெடிக்காமல் தண்ணீரில் மூழ்கிய குண்டுகளாக இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment