Wednesday, 19 June 2013

இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் :இராமநாதபுரத்தில் பரபரப்பு!

இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் :இராமநாதபுரத்தில் பரபரப்பு!

Source: Tamil CNN
ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரமணா ஐயர் என்பவரின் மகன் ரவி சாஸ்திரி(45).இவர், தேவிப்பட்டனம் திலகேஸ்வர சுவாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 13 ம் திகதி இதயக் கோளாறு காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16ம் திகதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.இதை அடுத்து அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தனர். இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பந்தல் கட்டி உறவினர்களும் கூடிவிட்டனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அவரது கால் விரல் அசைந்துள்ளது. பின்னர் காலில் சிறிதளவு இயக்கம் இருந்துள்ளது. இதை கவனித்த சிலர், அவரை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அவர் உயிருடன் இருப்பதும், அவரது இதயம் பலவீனம் அடைந்திருப்பதும் தெரியவந்தது.
இதை அடுத்து, அவர் இதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை உறவினர்களுடன் உற்சாகமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். இந்தச் செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இவருக்கு புவனா என்ற மனைவி உள்ளார். அவர் கூறுகையில், சிவ பெருமானைத் தொடர்ந்து பூஜை செய்து வந்தோம். சிவபெருமானின் அருளால் அவர் உயிருடன் மீண்டுள்ளார் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...